Kidny

Kidny

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டிச்சென்ற பாடசாலை மாணவன் முஹம்மத் ஹம்சாத் உயிரிழந்த சோகம்.


-எம்.எஸ்.சம்சுல் ஹுதா-

பொத்துவில் செங்கமம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட வாகன விபத்தில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர்
ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவர் பொத்துவில் 27. ரஸாக் மெளலானா நகரில் வசிக்கும்
முஹம்மத் ஹம்சாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொத்துவிலில் இருந்து செங்காமம் நோக்கி குறித்த மாணவன் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் எதிரே வந்த இராணுவ வீரது மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த இராணுவ வீரர் மேலதிக
சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத் தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன் உயிரிழந்துள்ள மாணவரது ஜனாஸா பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்க ளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- படம் : நபீத் -
மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டிச்சென்ற பாடசாலை மாணவன் முஹம்மத் ஹம்சாத் உயிரிழந்த சோகம். மோட்டார் சைக்கிள் விபத்தில் ஓட்டிச்சென்ற  பாடசாலை மாணவன் முஹம்மத் ஹம்சாத் உயிரிழந்த சோகம். Reviewed by Madawala News on 11/08/2017 12:37:00 PM Rating: 5