Kidny

Kidny

மடவளை அரச மருத்துவ நிலையத்தில் மருத்துவர் எவரும் இல்லை!


மடவளை அரச மருத்துவ நிலையத்தில் மருத்துவர் இல்லை!
உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டிய பிரச்சினை.

கடந்த சனிக்கிழமையில் இருந்து இன்று வரை (03.11.2017-07.11.217)
கடமையில் இருந்த வைத்தியர் வராத காரணத்தினால் நோயாளிகள் அவஸ்தைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஒரு MBBS + இரண்டு RMO களுமான மூன்று வைத்தியர்கள் கடமையாற்றிய நிலையில் MBBS வைத்தியர் தற்காலிகமாக இடமாற்றத்தில் சென்றவர் மீண்டும் வரவில்லை. அவரை இங்கு அனுப்புவதில் அவசியமற்ற காலதாமதம் ஏற்படுகிறது.

இன்னொரு RMO கடந்த 45 நாட்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று சென்றுவிட்ட நிலையில் மிகுதியான ஒரு வைத்தியரே இதுவரைக்கும் கடமை புரிகின்றார்.

கிளினிக் நோயாளர்கள், வெளிநோயாளர்கள் என இரண்டு சாராரையும் ஒரு வைத்தியரால் சிகிச்சையளிப்பதில் சிரமம் இருந்ததினால் அவர் அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலையில் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் வருகை தராமல் இருக்கின்றார்.

இதைப்பற்றிய அறிவித்தல் ஏதும் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.

நாளை 08-11-2017 அடுத்த கிளினிக் நாளாக இருக்கும் நிலையில் வைத்தியர் வருகை தராவிட்டால் நோயாளர்கள் அவதிக்குள்ளாக்கப்படுவது நிச்சயம்.

ஊரிலுள்ள பொறுப்புதாரிகள் இதற்கான நிரந்தர தீர்வை எட்டாவிட்டால் மடவளை அரச மருந்தகம் பாழ்படுத்தப்பட்டு பிரயோசனமற்றதாகி விடும் என்பதை கவனத்தில் கொள்வோம்.

இதே நிலை தொடர்ந்தால், குறிப்பிட்ட வரு வைத்தியரின் தன்னிச்சையான போக்கில்/கட்டுப்பாட்டில் ஓடும் இந்த மருந்தகம் மக்களுக்கு பிரயோசனமில்லாத ஒருவித செயல்பாட்டில் இயங்கும் என்பதையும் அனைவரின் கவனத்திற்கு ம் கொண்டு வருகிறேன்.

தகவல்,
சுல்பி சமீன்,
07-11-2017
மடவளை அரச மருத்துவ நிலையத்தில் மருத்துவர் எவரும் இல்லை! மடவளை அரச மருத்துவ நிலையத்தில் மருத்துவர் எவரும்  இல்லை! Reviewed by Madawala News on 11/07/2017 09:56:00 AM Rating: 5