Yahya

இலங்கையில் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்ததற்கான சான்று / ஆதாரங்கள் உள்ளன.


முஸ்லிம்களுடைய வரலாறு தொடர்பான விடயங்கள், ஆய்வுகள் மற்றும் தடயங்கள் போன்றவற்றை தேடுவது விமர்சிப்பது மற்றும் எடுத்துக் காட்டுவது என்பன நாட்டின் பல பாகங்களில் கடந்த மூன்று அல்லது நான்கு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் விடயமாக காணப்படுகின்றது.

இதனை மிகவும் அழுத்தமாகவும் ஆழமாகவும் மேற்கொண்டு வரும் ஆய்வு நடவடிக்கைகளிலிருந்து எம்மால் அறியக் கூடியதாக இருக் கின்றது, என பேராசிரியர் எம்.எஸ். எம். அனஸ் தெரிவித்தார்.

கொச்சிக்கடை "ரெனோவல்" ஹோட்டல் கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற கலாபூஷணம் எம். கே.எம். தாஜூதின் எழுதிய கம்மல் துறை வரலாறும் வாழ்வியலும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கம்மல்துறை கலை மற்றும் இலக் கிய மன்றம் இந்த புத்தக வெளி யீட்டு விழாவை ஏற்பாடு செய்தது.

 பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சில ஆய்வுகள் தொடர்பான விட யங்களை பல்கலைக்கழக ஆய்வு சம்பந்தமான விரிவுரைகளின் போது திரிபுபடுத்தி விபரிப்பதற்கான முயற்சிகளையும் ஒரு சில ஆய்வா ளர்கள் தற்போது மேற்கொள்வதைக் காணலாம். களனிப் பல்கலைக்கழகத்தின் வாசுதேவ என்ற ஆய்வாளர் இவ்வி டயத்தில் தீவிரமாக இருக்கின்றார்.

 இஸ்லாம் பாடப் புத்தகத்தில் குறிப் பிடப்பட்டுள்ள வரலாறு தொடர் பான விடயங்களை வாசுதேவ விமர்சிக்கின்றார். அவர் குறித்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு தொடர்பான குறிப்புக் களின் ஆதாரங்கள் தொடர்பாக கேள்விகளையும் எழுப்புகின்றார்.

எனினும் ஏனைய ஆய்வாளர்கள் இதற்கு ஆதரவு வழங்குவது இல்லை. இந்த விடயத்தில் அவர் கள் அமைதியாக இருப்பதைக் காணலாம்.

ஆனால் வாசுதேவ இலங்கையின் நாகரிகத்தை உலக நாகரிகங்களில் ஒன்றான நாகரி கமாக எடுத்துக் காட்டுவதற்காக முயன்று வருகின்றதைக் காணலாம்.

அதனை 25 ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட நாகரிகமாக எடுத்துக் காட்டுவதிலும் தீவிரமாக இருக் கின்றார். இதனை உறுதிப்படுத்து வதற்கு தொல்பொருள் ஆய்வின் தரவுகள், புராதன மட்பாண்டங்கள், Linoisillull உலோகங்கள், சிதைந்து காணப்படும் புராதன சிதைவுகளையே மக்கள் முன் சமர்ப்பித்து அதனை உறுதிப்படுத் துவதற்கு முயல்கின்றார். இவரின் இவ்வாறான முயற்சிக்கு சிங்கள மக்கள் மத்தியில் பலத்த ஆதரவும் இருப்பதையும் நாம் காண்கின் றோம்.

ஆனாலும் இலங்கையில் முஸ்லிம்கள் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் அல்லது அதற்கு முன்னரும் வாழ்ந்து இருப்பதையும் சில ஆய் வுகள் கூறியுள்ளன. பிரபல ஆய்வா ளர்களான எமர்சன் அலெக்சாண்டர் மற்றும் ஜோன்ஸ்டன் ஜெனட் ஆகி யோரின் தரவுகளிலிருந்து இலங்கை முஸ்லிம்களின் வரலாறு கி.பி 7ம் நூற்றாண்டிலிருந்து ஆரம்பித்துள் ளதை எடுத்துக் காட்டியள்ளது.

கொழும்பு, மருதானை, காலி ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த மூத்த பிர ஜைகளின் விபரிப்புக்களிலிருந்து மேற்படி ஆய்வாளர்கள் இதனைக் குறிப்பிட்டு தெளிவாக எழுதியுள் ளார்கள். ஒரு சமூகத்தின் வரலாறு என்பது சாதாரணமான விடயமல்ல.


சில சமயங்களில் புரட்சிகளையும் ஏற்படுத்தலாம்.மோதல்களும் ஏற்ப டலாம். முஸ்லிம்களாகிய நாம் எமக் கிடையில் ஒற்றுமையை வளர்த்து அதனைப் பேணிருவதிலும் கூடிய கவனம் செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் , தேர்தல் திணைக்களத்தின் மேலதிக ஆணை யாளர் அஷ்ஷெய்க் எம்.எம். மொஹமட் ஆகியோர் விசேட அதி திகளாகக் கலந்து கொண்டு உரை யாற்றினர்.

இவ்வைபவத்தில் நீர்கொழும்பு மற்றும் கம்மல்துறைபிரதேசத்தின் தனவந்தர்கள் மற்றும் கல்வியாளர் களும் கலந்து  கொண்டு சிறப்பித்தனர்.


இலங்கையில் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்ததற்கான சான்று / ஆதாரங்கள் உள்ளன. இலங்கையில் முஸ்லிம்கள் ஏழாம் நூற்றாண்டு முதல் வாழ்ந்ததற்கான சான்று / ஆதாரங்கள் உள்ளன. Reviewed by Madawala News on 11/01/2017 04:38:00 PM Rating: 5