Kidny

Kidny

மின்னல் தாக்கி சிறுவன் மற்றும் பெண் பலி.



மன்னார் முறுங்கன் பகுதியில் மின்னல் தாக்கி சிறுவன் ஒருவன் பலியானார்.

பலியான சிறுவன் 11 வயதுடைய, மன்னார் முறுங்கன் செட்டியார்கட்டையடம்பன் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுவன் இன்று மதியம் தமது வீட்டில் இருந்து வயலுக்கு சென்றுக் கொண்டிருந்த வேலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் உடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக மன்னார் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு - துறைநீலாவணைக் கிராமத்தில் இன்று மின்னல் தாக்கியத்தில் இரண்டு பிள்ளையின் தாய் ஒருவர் உயிரிழந்தார்.

இதன்போது உயிரிழந்தவர் 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
 
குறித்த பெண்ணின் உடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்தனர்.
மின்னல் தாக்கி சிறுவன் மற்றும் பெண் பலி. மின்னல் தாக்கி சிறுவன் மற்றும் பெண் பலி. Reviewed by Madawala News on 11/19/2017 08:42:00 PM Rating: 5