Kidny

Kidny

யகீன் மொடல் ஸ்கூலில் 2018 ம் ஆண்டுக்கான மாணவர் அனுமதி ஆரம்பம்.


அக்குறணை யகீன் மொடல் ஸ்கூல் மற்றும் அதன் பெண்கள் பிரிவான நிஸ்வான் மொடல் ஸ்கூல் ஆகிய பாடசாலைகளில் 2018 ம் ஆண்டு அனுமதிக்கான விண்ணப்பங்கள் தற்போது விநியோகிக்கப்படுகின்றன.

இப்பாடசாலைகளில் இலங்கை கல்வி அமைச்சின் பாடத்திட்டம் ஆங்கில மொழி மூலமாக கற்பிக்கப்படும் அதே வேளை புனித அல்குர்ஆன்  மனன வகுப்புக்களும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சிறந்த முறையில் பயிற்றப்பட்ட ஆசிரிய ஆசிரியைகளாலும் உலமாக்களாலும் இப்பாடசாலையைகளின்  பாடங்களும் ஹிFப்ளுள் குர் ஆன் வகுப்புக்களும் நடாத்தப்படுகின்றன.


மற்றும் உயர் மட்ட தொழில்நுட்பங்கள் இப்பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.


இலங்கையில் ஈ-லேனிங் கல்வி முறையைப் பாடங்களின் சுய தயாரிப்பு ஆய்வு கூட்டத்துடன் அறிமுகப் படுத்தி அதனை செவ்வனே அமுல்படுத்திக் கொண்டிருக்கும் முதலாவது பாடசாலை யகீன் மொடல் ஸ்கூல் ஆகும்.
2018 ம் ஆண்டுக்காக முன்பள்ளி வகுப்புகளில் இருந்து தரம் 11 வரையான மாணவ மாணவியர்  யகீன் மற்றும் நிஸ்வான் பாடசாலைகளுக்கு சேர்த்துக் கொள்ளப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும் யகீன் மொடல் ஸ்கூலின் பத்தாண்டு நிறைவையொட்டி  2018 ம் ஆண்டிற்கு தரம் 6 முதல் 11 வரையான மாணவ மாணவியருக்கான அனுமதிக் கட்டணம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச அனுமதிகள் இவ்வருடம் மட்டுமே வழங்கப்படவிருப்பதாக பாடசாலை அனுமதிகளுக்கான முகாமையாளர் ஷிபான் றிஷாப் தெரிவித்தார். மேற்கொண்டும் அவர் கூறும் போது  யகீன் மொடல் ஸ்கூலின் முன்பள்ளி கிளைகள் குறிப்பிட்ட சில நகரங்களில் 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப் படவிருக்கின்றன. உரிய நேரத்தில் அவை சம்பந்தமான தகவல்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய அனுமதிகளுக்கான விண்ணப்பப் படிவங்களை யகீன் மொடல் ஸ்கூல் காரியாலயத்தில் கிழமை நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.


அத்துடன் யகீன் மற்றும் நிஸ்வான் பாடசாலைகள் சம்பந்தமான அதன் தலைவருடனான நேர்காணலைக் கீழ்வரும் வீடியோவில் நேயர்கள் காணலாம்.
யகீன் மொடல் ஸ்கூலில் 2018 ம் ஆண்டுக்கான மாணவர் அனுமதி ஆரம்பம். யகீன் மொடல் ஸ்கூலில் 2018 ம் ஆண்டுக்கான மாணவர் அனுமதி ஆரம்பம். Reviewed by Madawala News on 11/15/2017 10:32:00 AM Rating: 5