Kidny

Kidny

சிராஸ்நூர்தீனை சீரோவக்க சதி முயற்சி ..

-AAM. Anzir-
முஸ்லிம்களிடையே சட்டத்துறை மற்றும் சமூக விவகாரங்களில் பிரபலம் பெற்று விளங்கும் 
சிராஸ் நூர்தீனுக்கு எதிராக போலிப் பிரச்சாரத்தை சில தரப்புகள் முன்னெடுத்துள்ள நிலையில், இலங்கைத் தீவில் பௌத்தசிங்கள இனவாதிகளை சட்டத்தின் மூலம் கட்டிப்போடச் செய்வதில் ஓரளவு வெற்றி கண்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட RRT எனப்படும் அமைப்பு கலைபடும் அபாயம் உருவாகியுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

கடந்த 2 வருடங்களாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களை இணைத்து ஓரணியில் செயற்படவும், பலம் பொருந்திய அமைப்பாக கட்டியெழுப்புவதிலும்  சிராஸ் நூர்தீனின் பங்களிப்பு மகத்தானதாக இருந்தது.

இவ்வருடம் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களை சம்மேளன செயலாளர் பதவியிலிருந்து மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் விலக முயன்றபோது, கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் அவரிடம் முன்வைத்த வலுவான கோரிக்கையை அடுத்தும் சில முஸ்லிம்கள் அவரிடம் சென்று கட்டிப்பிடித்து கதறியழுத நிலையிலும் கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களை சம்மேளன செயலாளர் பதவியிலிருந்து விலகும் தனது முடிவிலிருந்து சிராஸ் பின்வாங்கினார்.

மேலும் செயலாளர் பதவிக்கான தேர்தலில், அதிகப்படியான வாக்குகளினால் செயலாளராகவும் தெரிவானார்.

எனினும் சிராஸ் நூர்தீன்  மீது காழ்புர்ணர்வு கொண்ட சில சக்திகள், அவர் மீது சேறடிப்பதிலிருந்தும் பின்வாங்கத் தவறவில்லை.

முஸ்லிம்களிடையே அவருக்கு அதிகரிக்கும் செல்வாக்கு தம்மை ஆட்டம்காண வைக்கும் என்பதனால் அவரை மட்டம்தட்டும் பிரச்சாரங்களை மெல்லமெல்ல ஆரம்பித்தனர்.

மேலும் பொதுபல சேனாவுடன் முஸ்லிம் தரப்பு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு சிராஸ் நூர்தீன்  வில்லன் போன்றும் சித்திரிக்கப்பட்டார். எனினும் நாம் நன்கு அறிந்தவகையில்,அவர் வில்லன் அல்ல.

பல பௌத்தசிங்கள இனவாதிகளுக்கு எதிராக வழக்குகளை தொடுத்தவர் மற்றும் நீதிமன்றத்தில் இதுபற்றி வாதாடியவர் என்றவகையில் குறித்த பேச்சுவார்த்தை பற்றி விழிப்புடன் இருந்தார்.

சிராஸ் நூர்தீனுடைய இந்த விழிப்புணர்வை சரிவர புரிந்துகொள்ளாத சில முஸ்லிம்கள், அவர் மீது தாக்குதல் நடத்துவதில் இன்பம் அனுபவித்தனர்.சமூக ஊடகங்களில் பொய்யை கட்டவிழ்த்துவிட்டனர்.மேலும் பகிரங்கப்படுத்த முடியாத சிலரின், இரட்டைமுக செயற்பாடுகளினாலும் சிராஸ் நூர்தீன் கவலையடைந்தார்.

முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம், சிராஸ் நூர்தீனுக்கு ஆறுதல் சொல்வதில் நாம் தவறவில்லை.

தற்போது நிலைமை எல்லை மீறிச்செல்கையில்  முஸ்லிம் சட்டத்தரணிகளை கொண்ட RRT யை கலைக்கும் எண்ணத்தில் இருப்பதாக அறிகிறோம்.

இதனால் பாதிக்கப்படப் போவது முஸ்லிம் சமூகமே.

இந்நிலையில் RRT யை கலைக்கும் முடிவு குறித்து, சிராஸ் நூர்தீன் சிந்திக்க வேண்டுமென முஸ்லிம் சமூகத்தின் பெயரால் கோரிக்கை விடுக்கிறோம்

அவரது பணியும், சேவையும் முஸ்லிம் சமூகத்திற்கு தொடரவேண்டும்.

இதில் ஆர்வமுள்ள முஸ்லிம் சகோதரர்கள், சிராஸ் நூர்தீனுடன் தொடர்புகொண்டு அவரது முடிவை வாபஸ்  பெறச்சொல்லி அழுத்தம் பிரயோகிக்க  வேண்டுமெனவும் அழைப்பு விடுக்கிறோம்.
சிராஸ்நூர்தீனை சீரோவக்க சதி முயற்சி ..  சிராஸ்நூர்தீனை சீரோவக்க சதி முயற்சி .. Reviewed by Madawala News on 11/06/2017 04:36:00 PM Rating: 5