Kidny

Kidny

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா.


கேள்வி :
ஜும்ஆப் பிரசங்கத்தின் முன் நடைமுறையிலுள்ள மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை அறியும்
நோக்கில் உங்களது கிளையின் மூலம் எமக்கு அனுப்பப்பட்ட 2003.08.28 திகதியிடப்பட்ட கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகிறது.

FATWA
எல்லாப் புக
ழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், சலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

ஜும்;ஆப் பிரசங்கமும், அதன் தொழுகையும் இஸ்லாமிய வணக்க வழிபாடுகளில் உள்ளவையாகும். இவ்விரண்டையும் நபியவர்கள் நிறைவேற்றிய முறை பல ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது. நபியவர்கள் மிம்பரில் வந்து அமர்ந்த பின்  ஜும்ஆவுக்காக அதான் சொல்லப்படும். அதன் பின் அவர்கள் பிரசங்கத்தை நிகழ்த்திவிட்டு ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

மாறாக மஃஷர் ஓதுவது என்ற பெயரில் எம் மத்தியில் நடைமுறையில் உள்ளதைப் போன்று நபியவர்கள் வெள்ளிக்கிழமைகளில்  மிம்பரை நோக்கி வருமுன், ஒருவர் சமுகமளித்திருப்பவர்களை நோக்கி சில ஆயத்கள், ஹதீஸ்கள் போன்றவற்றை ஓதிக் காட்டும் முறை அக்காலத்தில் அறவே இருந்ததில்லை. 


அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. பிரபலமான மத்ஹப்களின் இமாம்களும் இம்முறை நபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் காலத்திலும், அதனை அண்மிய காலங்களிலும் நடைமுறையில் இருக்கவில்லை என்றே கூறியுள்ளார்கள்.


ஹிஜ்ரி 10ஆம்  நூற்றாண்டைச் சேர்ந்த ஷாபிஈ மத்ஹபின் பிரபல இமாம்களில் ஒருவராகிய இமாம் முஹம்மத் இப்னு ஷிஹாபித்தீன் அர்-ரமலீ (ரஹ்) அவர்கள் தமது 'நிஹாயத்துல் முஹ்தாஜ்' என்ற கிரந்தத்தில் நபியவர்களின் காலத்தில் ஜும்ஆ குத்பா நடைபெற்ற முறை பற்றியும், மஃஷர் பற்றிய தனது கருத்தையும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

'பிரசங்கம் நிகழ்த்துபவரு(கத்தீபு)க்கு முன் ஒருவர் வந்து ...إن الله وملائكته என்ற ஆயத்தையும், குறிப்பிட்ட ஒரு ஹதீஸையும் ஓதும் தற்காலத்திலுள்ள இவ்வழமைக்கு சுன்னாவில் (நபி வழியில்) எவ்வித அடிப்படையும் கிடையாது. இவ்வாறே எமது தந்தையும் (ரஹ்) தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இப்படி நபியவர்களின் முன்னிலையில் செய்யப்படவில்லை.


மாறாக, மக்கள் ஒன்று சேரும் வரை வெள்ளிக்கிழமையில் நபி;யவர்;கள் தாமதிப்பவர்களாக இருந்தார்கள். மக்கள் ஒன்று  கூடியதும் மக்களை நோக்கி  தனியாகவே வருவார்கள். அவர்களுக்கு முன்னால் சப்தமிட்டுக்கொண்டு வரும் படைக்கலச் சேவிதர் எவரும் இருக்கவில்லை. (முற்காலத்தில் பெரும்பாலும் ஆட்சியாளர்களே ஜும்ஆவை நடத்துவதால் நூலாசிரியரின் காலத்தில் இப்படியொரு வழமை இருந்திருக்கலாம்). பள்ளிக்குள் நுழைந்ததும் மக்களுக்கு சலாம் கூறுவார்கள்.

பின்னர் மிம்பரில் ஏறி மக்களை முன்னோக்கி சலாம் சொல்வார்கள். அதன் பின் அவர்கள் அமர பிலால் (ரழி) அவர்கள் அதான் சொல்;ல ஆரம்பிப்பார்கள். அவர்கள் அதான் சொல்லி முடிந்ததும் அதானுக்கும்,

குத்பாவுக்குமிடையில் வேறு எந்தப் பேச்சுக்களிலும் ஈடுபடாமல் நபியவர்கள் பிரசங்கம் நிகழ்த்தவாரம்பிப்பார்கள். இவ்வாறே அவர்களின் பின் வந்த மூன்று கலீபாக்களும் செய்து வந்தனர். எனவே இது (மஃஷர் ஓதும் வழமை) 'அழகான பித்அத்' எனத் தெரிகின்றது.' (பாகம் : 2 பக்கம் : 325)

மேலும் ஜும்ஆவிற்கு சமுகளிப்பவர்கள் அமைதியாக இருந்து குத்பாவைக் காதுதாழ்த்திக் கேட்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் பல நபி மொழிகளை நாம் காணலாம். இதனை ஞாபகமூட்டும் நோக்கில் மஃஷர் ஓதப்பட்டாலும் தற்போது ஜும்ஆவில் சிறு தொகையினரே குத்பா தொடங்கப்படும்போது சமுகமளிப்பதால் அந்நோக்கம் பெரும்பாலும் அடையப்படாமலிருப்பதும் கண்கூடு.

குத்பாவின் இடை நடுவிலும், அதன் இறுதிப் பகுதியிலும் பள்ளிக்கு வரும் பெரும் பகுதியினர் வீண் பேச்சுக்களில் ஈடுபட்டு. சப்தமிட்டுக் கொண்டிருப்பதை நாம் பரவலாகக் காண்கின்றோம். எனவே, ஜும்ஆப் பிரசங்கத்தை அமைதியாக செவிமடுக்கத் தூண்டும் ஆதாரபூர்வமான சில ஹதீஸ்களை தெளிவாக எழுதி பள்ளி;யின் நுழைவாயிலிலும், அறிவித்தல் பலகையிலும் தொங்க விடுவது இந்நோக்கத்தை அடைவதற்கு மிகவும் பொருத்தமான பயனுள்ள வழியாகத் தென்படுகிறது. கீழ்க்காணும் ஹதீஸ்களை இந்நோக்கத்துக்குப் பயன்படுத்தலாம்:

'வெள்ளிக்கிழமை இமாம் பிரசங்கம் (குத்பா) நிகழ்த்தும் போது நீர் உமது தோழனைப் பார்த்து காதுதாழ்த்திக் கேள் என்று சொன்னாலும் நீர் வீண் வேலை செய்து விட்டீர்.' (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி), நூல் :  சஹீஹுல் புகாரீ, சஹீஹு முஸ்லிம்)
'யார் குளித்து பிறகு ஜும்ஆவிற்கு சமுகமளித்து அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டதை தொழுது விட்டு பின்னர் அவர் (இமாம்) பிரசங்கத்தை (குத்பாவை) முடித்து பின் அவருடன் தொழும் வரை காதுதாழ்த்தி இருப்பாரோ, அன்றைய வெள்ளிக்கிழமைக்கும், அடுத்த வெள்ளிக்கிழமைக்கும் இடைப்பட்டதும் மேலும் மூன்று நாட்களுக்கும் அவருக்கு மன்னிக்கப்படும்.' (அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரழி), நூல் : சஹீஹு முஸ்லிம்)  வணக்க வழிபாடுகளில் நபி வழியைப் பேணுவது கடமையாகும்.

இதற்காக வீண் சர்ச்சைகளை ஏற்படுத்துவதும், குதர்க்க வாதங்களில் ஈடுபடுவதும் எமக்கு ஏற்ற செயல்கள் அல்ல. சமூக ஒற்றுமையைப் பாதிக்காமல் காரியமாற்றுவது அதி முக்கியமானது.  

அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.
FATWA # 012/ACJU/F/2004


ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா. ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை வெளியிட்டது ஜம்மியத்துல் உலமா. Reviewed by Madawala News on 11/13/2017 09:57:00 AM Rating: 5