Kidny

Kidny

நாட்டின் பல பாகங்களிலும் நாய்கள் மற்றும் பூனைகள் கொடுரமாக கொலை செய்யப்படுகின்றன. பெளத்த குருமார்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.


(ஏ.ஆர்.ஏ.பரீல்) 
நாட்டின் பல பாகங்களிலும் நாய்கள் மற்றும் பூனைகள்  கொடுரமாக கொலை செய்யப்படுவதாகவும், இது அடிப்படை உரிமை மீறல் எனவும் இதைத்தடுக்குமாறும் பெளத்த குருமார்கள் மற்றும் சமய போதகர்களால் தாக்கல் செய்யப் பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர் மானித்து 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி விசாரணையை உறுதி செய்துள்ளது.


இத்தீர்மானத்தை உயர்நீ திமன்ற நீதியரசர்கள் ஈவா வனசுந்தர, பிரியந்த ஜயவர்த் தன மற்றும் நளின் பெரேரா ஆகியோர் மேற்கொண்டனர்.

மனுதாரர்களான பெளத்த குருமார்கள் பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர், அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன மற்றும் கொழும்பு மாநகரசபையினர் ஆகியோர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

நாட்டில் பாரிய அளவில் வாய்பேச முடியாத மிரு கங்களான நாய்களும்,பூனைகளும்   கொடுரமாகக் கொல்லப்பட்டு வருகின்றன. இது மனிதாபிமான மற்ற, சித்திரவதைக்குள் னாக்கப்படும் கொடூரமான செயலாகும்.

இதனால் அப்பாவி வாய்பேச முடியாத மிருகங்கள் பாதிக்கப்படுகின்றன என மனுதாரர்கள் தமது மனுவில் முறையிட் டுள்ளனர்.

இலங்கை, பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு பெளத்த நாடாகும். அரசியலமைப்பில் இந்த உத்தரவாதம் வழங்கப்பட் டுள்ளது. பெளத்த மதம் அகிம்சையைப் போதிக்கி றது. எனவே இவ்வாறான நாட்டில் மிருகங்கள் கொடுரமாக கொலை செய்யப்படும் விடயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட வேண்டும்


எனவும் அவர்கள் கோரியிருக்கிறார்கள். பெளத்த தர்மத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உயிருக்கும் வாழ்வதற்கான உரிமையிருக்கிறது. வேறு எவரினாலும் துன்பங்களுக்குள்ளாக முடியாது.

நாய்களும், பூனைகளும் மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் என்பனவற்றின் வளாகங்களில் நஞ்சேற்றி கொலை செய்யப் படுகின்றன.

ராகம வைத்தியசாலை, மொனராகலை வைத் தியசாலை உட்பட பல பகுதிகளில் இவ்வாறான மிருகங்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொடுரமாக கொலை செய்யப்படுகின்றன எனவும் மனுதாரர்கள் முறையிட்டுள்ளனர்.

பிரதிவாதிகளிடமிருந்தும், அவர்களின் பிரதிநிதிகளிடமிருந்தும் தண்டனையாக நஷ்டஈடு ஒன்றினை விதிக்கும்படியும் கோரியுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலும் நாய்கள் மற்றும் பூனைகள் கொடுரமாக கொலை செய்யப்படுகின்றன. பெளத்த குருமார்கள் வழக்கு தாக்கல் செய்தனர். நாட்டின் பல பாகங்களிலும் நாய்கள் மற்றும் பூனைகள்  கொடுரமாக கொலை செய்யப்படுகின்றன. பெளத்த குருமார்கள் வழக்கு தாக்கல் செய்தனர். Reviewed by Madawala News on 11/16/2017 10:24:00 AM Rating: 5