Kidny

Kidny

நல்லாட்சியின் ஆயுளை தீர்மானிக்கும் உள்ளூராட்சி தேர்தல்.


கடந்த 2015ம் ஆண்டு இலங்கை சரித்தை மாற்றியமைத்து இரண்டு தேசியக் கட்சிகளின் நல்லாட்சி உருவானது.


நீண்டகால மஹிந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்ட வெறுப்ப,ஊழல்,இனமோதல்கள் மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் ரணில்-மைதிரி கூட்டாட்சி அமைந்தது.


கொள்கைரீதியில் முரண்பாடான இரு தேசியக் கட்சிகளும் நாட்டின் தேசிய நலனுக்காக ஓரணியாக இணைந்து.குறிப்பாக 2002ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த தேர்தலிலும் வெற்றிபெறாத ஐதேகட்சி மக்கள் மீதானதும் தலமைத்துவம் மீது கொண்ட அதிருப்தியை சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது.மைதிரி சார்பான SLFPஐப் பொறுத்தவரையில் தொடர்ச்சியாக அதிகாரத்தில் இருந்து வந்ததோடு,மஹிந்த சகோதரர்களை விரட்டி அடிக்க வேண்சிய தேவைமட்டுமே நோக்கமாக இருந்தது.


இருவருக்கும் பொது எதிரியான மஹிந்தவை தோற்கடித்தாலும்,நடமுறை ரீதியில் நல்லாட்சியை கொண்டு நடாத்துவதில் பாரிய  சவால்களை எதிர்கொண்டனர்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் மைதிரி சார்பான அணி சிக்கலை எதிர்கொண்டுள்ளது. கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஐதேகட்சி அமைச்சர்கள் மீது போட்டு தனது பலத்தை மைதிரி துணிச்சலாக காய்நகர்த்தினர்.


மஹிந்தாட்சியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியான தில்லியன் கணக்கில் ஊழல்,திருட்டு,துஸ்பிரயோகம் ,சொத்துக்குவிப்பு மற்றும் இலஞ்சம் என பகிரங்கமாக வெளியானபோதும் விசாரணை,கைது மற்றும் பிணை வழங்குதலோடு முற்றுப் பெற்றது.

இது மைதிரி தனது SLFP கட்சியினரை காட்டிக் கொடுக்காமலும் ,தனது பெயருக்கு அபகீர்த்தி ஏற்படாமலும் ஆடிய ஆட்டமே.

மாறாக மஹாராஜா ஊடகத்தை தனது சொந்த சொத்தாக்கி ஐதேகட்சிக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

அத்துடன் முறிகள் விடயத்தில் ஆணைக்குழுவை நியமித்து ஊடகங்கள் ஊடாக தேகட்சிக்கு சேறுபூசி மஹிந்த ஆட்சியின் சகல ஊழல்களையும் மக்கள் மனங்களில் இருந்து நீக்குவதற்கு பிராயத்தனம் தேடினார்.

அமைச்சர்களான திலக் மாரப்பன்,ரவிகருணாயக,மற்றும் பல்வேறு ரணில்சார்பான திணைக்கள அதிகாரிகளை பணிநீக்கம் செய்வதற்கு ஊடகத்தை ஏவிவிட்டது கவலைக்குறியதே.

இதன் மூலம் SLFP சார்பாக மஹிந்த செய்த ஊழல்களை ஐதேகட்சி எதிர்காலத்தில் விமர்சிக்காத வகையில் ரணில் மற்றும் ஐதேகட்சி மீது மக்களுக்கு ஊழல் குற்றச்சாட்டு திசைமாற்றப்பட்டுள்ளது.

காரணம் மைதிரியைப் பொறுத்தவரையில் எந்தத் தேர்தலையும் தனியாக சந்திக்கும் ஆளுமை இல்லாதவர் என்பதோடு மஹிந்தஅணி ஆதரவின்றி எந்தப் பலனும் இல்லை என்பதை உணர்ந்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக மஹிந்த அணியினரை பலவீனப்படுத்தவும்,தன்பக்கம் இழுப்பதற்கும் பிரயோகித்த எந்த அழுத்தங்களும் வெற்றி அளிக்கவில்லை.

மஹிந்த அணியினர் ஓரளவு தங்கள் மீதான அழுத்தங்களை தவிர்க்க ஒற்றுமையை வலியுறுத்தினர்.

ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவித்துள்ள நிலையி்ல் மைதிரி அணியினரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

மஹிந்த அணியினரை தன்னுடன் இணைத்துக் கொள்ள இயலுமானளவு பிரயத்தனம் எடுத்துள்ளார்.

வடகிழக்கிற்கு வெளியே உள்ள உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் SLFP அடிமட்ட உறுப்பினர்கள் மஹிந்த அணிபக்கமே உள்ளனர்.இந்த நிலையில் தேர்தலை முகம் கொடுப்பதில் மிகக்கடினத்தை மைதிரி சந்தித்துள்ளார்.


1-தனித்துப் போட்டியிட்டால் எந்த சபையையும் கைப்பற்ற முடியாது. அத்துடன மஹிந்த அணி, ஐதேகட்சிக்கு அடுத்த மூன்றாவது அணியாகவே வாக்குகளைப் பெறுவார்.


2-ஐதேகட்சி வெற்றி பெற்றால் நல்லாட்சியில் தனது அதிகாரப் பலத்தை ஐதேகட்சியிடம் அடமானம் வைக்க வேண்டி ஏற்படும்.

3-மஹிந்த அணி கூடுதலான வாக்குகளை/ஆசனங்களைப் பெற்றால் கட்சியின் தலமைக்கும் தனக்கும் எதிராக SLFP போர்கொடி தூக்கும்.குறிப்பாக தன்னுடன் இருக்கும் சகல SLFP பாராளுமன்ற அமைச்சர்/உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் ஓடிவிடுவார்கள்.

இந்த நிலையில் தன்னுடன் இருக்கும் உறுப்பினர்களில் அதிகமானவர்கள் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாகவும்,மஹிந்தசார்பான கொள்கையுடன் இருப்பது மைதிரியை மேலும் பலவீனப்படுத்தி உள்ளது.

குறிப்பாக அமைச்சர்களாக சுசில்பிரேம், மஹிந்தசமரவீர, விஜினமுனி சொய்ஷா, பௌசி, திலான் மற்றும் ஜோன்செனவிரத்த போன்ற மஹிந்த சார்பினர் இவர்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.


தற்போதைய நிலவரங்களின்படி மைதிரி அணியினர் ஏதோ ஒரு உடன்பாட்டில் மஹிந்த அணியுடன் இணைய வேண்டிய நிலைக்கு அடிபணிய வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடகங்களுக்கு பலவிடயங்கள் மறைக்கப்பட்டு இரகசியமான பலகட்டப் பேச்சுக்கள் மஹரகம்,திஹாரிய மற்றும் குருணாகல் பிரதேசங்களில் தொடர்ந்து இடம் பெறுகின்றது.வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன்னர் உத்தியோகப்பற்று அற்ற முறையில் இணைப்பதற்கான முயற்சி ஓரளவு வெற்றிகண்டுள்ளது.


அதேநேரம் இந்த நெருக்குதலை முன்கூட்டி மைதிரி அணியினர் அறிந்திருந்தனர்.இதனாலே உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க இயலுமானவரை பின்கதவால் முயற்சித்ததாக குற்றச்சாட்டும் உள்ளது.தற்போது நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கையில் இந்த சந்தேகம் ஊர்ஜிதமாகிறது.

இந்த நிலையில் ஐதேகட்சி உடனான தொடர்புகளை துண்டித்து வருமாறு மஹிந்தஅணி நிபந்தனை விதித்துள்ளது.இது மைதிரியை தூக்கு மேடைக்கு ஏறுமாறு பணிப்பது போன்றது.ஏனெனில் மஹிந்த அணியினரை SLFPகுள் உள்வாங்கினால் அடுத்த கணம் மைதிரி ஆபத்தானதே.மஹிந்த SLFP கட்சிக்குள் இன்றும் பலமாகவே உள்ளார்.


ஆகவே ஒற்றுமை என்பதைவிட மஹிந்த அணியை கட்சிக்குள் உள்வாங்குவதே ஆபத்துமிக்கது.இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தலில் தனது அணி தோல்விகண்டால்

1-தன்னுடன் இருப்பவர்களை ரணில் அணி விலைக்கு வாங்கிவிடலாம்?
2-தன்னுடன் இருப்பவர்கள் மஹிந்த பக்கம் சேர்ந்து ஆட்சியமைக்க முற்படலாம்?
3-தனது உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஐதேகட்சியின் சில அதிருப்தி உறுப்பினர்கள் மற்றும் மஹிந்த இணைந்து ஆட்சியமைக்கலாம்?
4-உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

நிதி மற்றும் மோசடி ஆணைக்குழு ரணிலின் கட்டிப்பாட்டில் இருந்தபோது,  அதன் செயற்பாடுகள் அரசியல்வாதிகளுக்கு எதிராக இருந்த போதும்,கடைசியில் SLFPமீது சேறுபூசுவதாக இருந்தது.இதனால் மைதிரி இதன் செயற்பாடுகளை பல்வேறு வழிகளில் செயல் இழக்கச் செய்தார்.ஆனால் தனக்கும் தனது கட்சிக்கும் எதிராக ஐனாதிபதி ஆணைக்குழு முன்னெடுத்த எந்த செயற்பாட்டையும் ரணிலால் தோற்கடிக்க முடியவில்லை.இருந்தும் ஐதேகட்சி தனித்து அல்லது சிலகட்சிகளின் கூட்டில் தேர்தலை சந்திக்க பின்வாங்கவில்லை.மைதிரியால் தனித்து தேர்தலை சந்திக்க முடியாது என்பது ரணிலுக்கு நன்கு தெறியும்.இருந்தும் மஹிந்த அணியுடன் கூட்டச் சேர்ந்தால் தனது கட்சி பலவீனமடையும் என்பதை மறந்துவிட்டிருக்கலாம்.

மஹிந்த அணியைப் பொறுத்தவரையில் SLFPகட்சிக்குள் மீண்டும் நுழைவதற்கும் அதிகாரத்தை தனது கைகளுக்கு மாற்றிக் கொள்ளலும் சந்தர்ப்பம் தேவையாக இருந்தது.இதற்கான சூழ்நிலை இந்த உள்ளூராட்சித் தேர்தலுடன் உருவாகியுள்ளது.மைதிரியுடன் இருக்கும் அதிகமான உறுப்பினர்கள் மஹிந்தவுடன் இணைவதையே அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றனர்.

மைதிரி அணி தனித்து நின்றால் எந்த தேர்தலிலும் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும்.அதேநேரம் கூட்டுச் சேர்ந்தால் மறுநாளே மைதிரி வீட்டுக்கு அல்லது மைதிரி அடிக்கடிகூறுவது போல தனது உயிருக்கு ஆபத்தைகூட எதிர்பார்த்திருப்பார்.அத்துடன் ஐதேகட்சியுடன் சங்கமானால் தனது அரசியல் இத்துடன் முடிந்துவிடும்.

ஆகவே மஹிந்த அணியினர் பக்கம் காற்று பலமாக வீசத் தொடங்கியுள்ளது.இந்த நிலையை சாதகமாக அல்லது பாதகமாக மாற்றிக் கொள்வதில் மைதிரியின் முடிவை முக்கியமானதாக நாடு முழுவதுமாக எதிர்பார்க்கப்படுகிறது.

Fahmy MB Mohideen
நல்லாட்சியின் ஆயுளை தீர்மானிக்கும் உள்ளூராட்சி தேர்தல். நல்லாட்சியின் ஆயுளை தீர்மானிக்கும் உள்ளூராட்சி தேர்தல். Reviewed by Madawala News on 11/30/2017 01:50:00 PM Rating: 5