Kidny

Kidny

Bad Light .. தோல்வியை தவிர்த்து 'டிராவில்' முதல் டெஸ்ட்டை முடித்தது இலங்கை அணி.



இந்தியா சென்றுள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 172 ரன்கள், இலங்கை அணி 294 ரன்கள் எடுத்தது.



இரண்டாவது இன்னிங்சில், இந்திய கேப்டன் கோலி, தனது 50வது சர்வதேச சதம் விளாசி அசத்த இந்திய அணி 8 விக்கெட்டுக்கு, 352 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து இலங்கை அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.



இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி, ஆரம்பம் முதலே  ஆட்டம் கண்டது. சமரவிக்ரமா (0) புவனேஷ்வர் வேகத்தில் போல்டானார். ஷமி தன்பங்கிறகு கருணரத்னேவை (1) வெளியேற்றினார். திரிமன்னேவை (7) புவனேஷ்வர் அவுட்டாக்க, அனுபவ மாத்யூஸை (12) உமேஷ் அவுட்டாக்கினார்.



தொடர்ந்து சரிவை கண்ட இலங்கை அணிக்கு டிக்வெல்லா, அதிரடியாக ரன்கள் சேர்த்தார். டிக்வெலா (27), சண்டிமால் (20) என அடுத்ததடுத்து வெளியேற இலங்கை ரசிகர்கள் சோர்வடைந்தனர்.



இந்நிலையில் இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்த போது போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டிடிராஆனதாக அறிவிக்கப்பட்டது.



முதல் டெஸ்டின் முதல் இரண்டு நாட்கள் ஆட்டம் மழையால் பாதிக்க, எஞ்சியுள்ள மூன்று நாட்களில் கோலி சதம், ‘திரில்இலக்கு என ரசிகர்களுக்கு இப்போட்டியில் அதிக சுவாரஸ்யம் வழங்க இந்திய வீரர்கள் தவற வில்லை. மறுபுறம் இலங்கை அணி வீரர்களும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினர்.



இதனால் அடுத்த இரண்டு டெஸ்டிலும் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 24-28 வரை நாக்பூரில் நடக்கிறது.

Bad Light .. தோல்வியை தவிர்த்து 'டிராவில்' முதல் டெஸ்ட்டை முடித்தது இலங்கை அணி. Bad Light .. தோல்வியை தவிர்த்து 'டிராவில்' முதல் டெஸ்ட்டை முடித்தது இலங்கை அணி. Reviewed by Madawala News on 11/20/2017 04:57:00 PM Rating: 5