Ad Space Available here

முஸ்லீம் அரசியல்வாதிகளின் சமுக "அக்கறை".. இந்த ஒரு சம்பவமே சாட்சி.


கடந்த மாதம் அம்பாரை திட்டமிடல் பணிப்பாளர் அண்வர்தீன் என்பவரை கொழும்புக்கு இடமாற்றம் செய்வதற்கான
கட்டளையும் அவருக்குப் பதிலாக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த நெடுஞ்செழியன், திருமதி பாக்கிய்ராஜா என்கின்ற இருவரும் இடமாற்றப் பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஏறாவூரைச்சேர்ந்த வஹாப்தீன் என்பவர் திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.


அம்பாரைக்கு முஸ்லீம் ஒருவர் நீக்கப்பட்டு தமிழர் ஒருவர் நியமிக்கப்படுவதனை எம் அரசியல்வாதிகள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

 ஆனால் மட்டக்களப்பின் சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் அங்கு ஒருமுஸ்லீம் திட்டமிடல்ப் பணிப்பாளர் வருவதனை வன்மையாகக் கண்டித்து அந்த விடயத்தை ஜனாதிபதிவரை கொண்டுசென்று வஹாப்தீன் என்பவரை வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டு அந்த இடத்திற்கு தமிழர் ஒருவரை நியமிப்பதில் வெற்றி கண்டுள்ளனர்.


இந்தவிடயம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் இணையத்தில் இன்று 1.11.2017 வெளியிடப்பட்டுள்ளது.


அதனடிப்படையில் இன்றும் இன்னொரு வெற்றியடைந்துள்ளனர்.
இச்சூள்நிலையில் அன்வர்தீனின் இடமாற்றத்திற்கு எதிரான முறையீட்டை இறத்துச்செய்ததது மட்டுமல்லாமல் அம்பாரை மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்ட இளஞ்செழியனையும்,திருமதி பாக்கியராஜாவையும் மீள் உறுதிசெய்தது மட்டுமல்லாமல் இரண்டு மாவட்டங்களையும் தமது வசமாக்கிக்கொண்டதோடு தங்கள் சமுகத்தின்மீது அவர்கள் கொண்டிருந்த அக்கரைக்கு அவர்களை உண்மையாக நாம் பாராட்டுகின்றோம்.

அப்படியென்றால் அம்பாரை மாவட்ட முஸ்லீம் அரசியல் வாதிகளின் அக்கறை என்ன எங்கே என்பதுதானே உங்கள் கேள்வி?


இடமாற்றம் செய்யப்படும்போது அதற்கு எதிராக குறித்த உத்தியோகத்தர் முறையீடு செய்ய முடியும் நீங்கள் முறையீடு செய்து அதன்பிரதியை எனகுத்தாருங்களென கௌரவ பாராளுமன்ற உருப்பினர் பைசால் காசீம் அவர்கள் வாங்கி எடுத்துள்ளார்.

அதுபோன்று சர்ஜுன் என்பரூடாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் வாங்கி எடுத்துள்ளார்.

அதுபோன்று தஜ்மீல் என்பவரூடாக முன்னைநாள் கிழக்கு மாகாண உறுப்பினர் தவம் வாங்கி எடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக மருதமுனை முஸ்லீம் காங்கிரஸ் மத்தியகுளு உறுப்பினர் சித்தீக் மற்றும் அபுல் மாஸ்டர் போன்றோர் SLMC யின் தலைவருக்கு தொலைபேசியில் அறிவித்துள்ளனர் இந்நிலையில்த்தான் அன்வர்தீனின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டு அவருக்கான கொழும்பு இடமாற்றம் இன்று மீண்டும் பொதுநிர்வாக அமைச்சினால் உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இப்போது விளங்கியிருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளின் சமுக அக்கறை.
இந்தவிடயம் தொடர்பாக செயலாளர் அல்வீசிடம் கேட்டபோது முஸ்லீம் அரசியல்வாதிகளே அன்வர்தீனை எப்படியாவது இடமாற்றஞ்செய்யுங்கள் என அவரிடம் பலதடவைகள் கேட்டுள்ளார்களென அவர்சுட்டிக்காட்டியதை அறியக்கூடியதாக உள்ளது.

இதற்குக்காரணம் அன்வர்தீன் அரசியல் வாதிகளின் காசை அவரின் ஊருக்கு எடுத்துச்சென்று அபிவிருத்தி வேலைகளை அவர்செய்வதாகக் காட்டுவதாகவும் இறுதியாக மருதமுனைக் கடற்க்கரை வீதிக்கு தேசிய நல்லிணக்க அமைச்சினால் 125 Millions ரூபாக்களை தனது ஊருக்கு கொண்டுசென்றுள்ளதாகவும் மற்றும் சந்திரிக்கா அம்மையாரை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அவரே அழைத்துச்சென்றதனாலும் இதனால் அரசியல்வாதிகள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளதாலும்
அதனடிப்படையிலேயே அரசியல்வாதிகள்தான் அன்வர்தீன் அவர்களது மேன்முறையீட்டை நிராகரிக்கக் கூறினார்கள் என அவர்கூறியதை அறியக்கூடியதாகவுள்ளது.


இது இவ்வாறிருக்க குறித்த உயரதிகாரி பொதுச்சேவைகள் ஆணைக்குளுவிடம் வேறு ஏதாவது மருத்துவக்காரணங்களை சுட்டிக்காட்டி முறையீடு செய்யும் பட்ச்சத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டால் 06 மாதங்களோ அல்லது ஒரு வருடமோ பிற்போடப்பட்டாலும் அவருக்கான இடமாற்றமென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரங்களை தொடர்ச்சியாக மருதமுனைமக்கள் இழந்தமையின் விளைவே இவ்வாறானதொரு நிலமைக்குக் காரணமென எண்ணத்தோன்றுகிறது.

அத்தோடு மருதமுனையை பளிதீர்க்க நினைத்து ஒட்டுமொத்த அம்பாரை முஸ்லீங்களையும் பளிதீர்த்த பாவத்தையும் உரிய அரசியல்வாதிகளே பொறுப்பேற்க வேண்டும்.

பிரதேசவாதம் தலைதூக்கியுள்ள இந்தக்காலத்தில் எந்தப்பிரதேச வாதத்திற்கும் துணைபோகாமல் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட மருதமுனைமக்கள் கல்வியையே மூலதனமாகக்கொண்டு உயரதிகாரிகளிணூடகப் பெறுகின்ற சேவைகளையும் ஓரவஞ்சனையோடு இல்லால் செய்கின்ற இவ்வாறான அநீதிகளுக்கெதிராக கிழர்ந்தெழுகின்றதொரு சூழ்நிலையை உருவாக்காமல் உரிய நேரத்திற்கு மருதமுனை மக்களுக்கு அரசியல் உதவிகளைச்செய்து எங்களையும் அரவணைத்துப்போவது உங்கள் கடமையாகவுள்ளது.


இல்லையெனில் காலாகாலமாக நாங்கள் வாக்களித்து உங்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதனால் எங்களுக்கு என்ன பயன்?
முஸ்லீம் அரசியல்வாதிகளின் சமுக "அக்கறை".. இந்த ஒரு சம்பவமே சாட்சி. முஸ்லீம் அரசியல்வாதிகளின் சமுக "அக்கறை".. இந்த ஒரு சம்பவமே சாட்சி. Reviewed by Madawala News on 11/01/2017 02:50:00 PM Rating: 5