Kidny

Kidny

பெளத்த தேரர் 32 இலட்ச டென்டரில் மாட்டிறைச்சிக் கடை எடுத்த விவகாரம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியது.


ஏ.ஆர்.ஏ.பரில்-
பெளத்த குரு ஒருவர் மத்துகம நகரில் மத்துகம பிரதேச சபையிடமி ருந்து 32 இலட்சத்து 25 ஆயிரத்து 622 ரூபா
செலுத்தி சட்ட ரீதியாக குத்தகைக்கு (டென்டர்) பெற்றுக்கொண்டுள்ள மாட்டிறைச்சிக் கடை விவகாரம் சில பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளது.

 மத்துகம நகரிலுள்ள மாட்டிறைச்சிக் கடையை குத்தகைக்கு வழங்க விலை மனு (டென்டர்) மத்துகம பிரதேச சபை யினால் கோரப்பட்டபோது ஆகக்கூடிய தொகை குறிப்பிட்டிருந்த மாவிட்ட ஞான ரத்ன தேரரின் விலைமனு அதற்கென நியமிக்கப்பட்டிருந்த கமிட்டியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என மத்துகம பிரதேச சபை செயலாளர் அசோக ரண சிங்க தெரிவித்தார்.


பிரதேச சபை செயலாளர் அசோக ரணசிங்க மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட தேரர் மூன்று மாதங்களுக் கான வாடகையை கடந்த இரண்டாம் திகதி வியாழக்கிழமை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், மூன்று மாத வாட கையைச் செலுத்துவதற்கு அவர் ஒரு வாரகால அவகாசம் கோரியுள்ளார்.
அவரது கோரிக்கை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

டென்டரில் இறைச்சிக் கடையை குத்தகைக்கு எடுத்த தேரர் குத்தகைக்கு வழங்கப்பட்ட தினத்திலிருந்து ஒரு வார காலத்துக்குள் கடையைத் திறக்காது விடின் குத்தகையை இரத்துச் செய்வதற் கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும் இன்று திங்கட்கிழமை உள் ளூராட்சி ஆணையாளரை தான் சந்தித்து இவ்விவகாரம் தொடர்பில் அவரது ஆலோசனைகளைப்பெற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை இறைச்சிக்கடையை குத்தகைக்குப் பெற்றுள்ள மாவிட்ட ஞானரத்ன தேரர் இறைச்சிக்கடையை தான் குத்தகைக்கு டென்டரில் பெற்றுக்கொண்டது அதை திறக்காது மூடி வைப்பதற்காகவே என்று தெரிவித்துள்ளார்.

பெளத்த தேரர் 32 இலட்ச டென்டரில் மாட்டிறைச்சிக் கடை எடுத்த விவகாரம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியது. பெளத்த தேரர் 32 இலட்ச டென்டரில்  மாட்டிறைச்சிக் கடை எடுத்த விவகாரம் பிரச்சினைகளுக்கு உள்ளாகியது. Reviewed by Madawala News on 11/06/2017 02:23:00 PM Rating: 5