Kidny

Kidny

சாய்ந்தமருதுக்கு தனியான சபை இப்போதைக்கு சாத்தியமில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டவட்டமாக தெரிவிப்பு ..


சாய்ந்தமருதுதனியான பிரதேச சபை கேட்டு  கடந்த பல ஆண்டுகளாக  அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


அத்துடன் கல்முனை - சாய்ந்தமருது பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் உன்னாவிரதங்கள் ஹர்த்தால்  என நிர்வாகங்கள் சீர்குலைந்துள்ளன.


கடந்த 3 நாட்களாக  நடைபெற்று வரும் நிகையில் இது பற்றி அமைச்சர் பைசர்  அவர்களின் அமைச்சில் இடம்பெற்ற அவரது ஊடக மநாட்டில் நான் கேள்வி எழுப்பினேன்.  


அதற்கு பதில் அளித்த அவர்,


சாய்ந்தமருதுக்கு தனியான ஒரு  பிரதேச சபை கோரிக்கை இருந்து வருகின்றது.அது பற்றி நான் நன்கு அறிவேன்அதனை அங்கு தேர்தல் காலத்தில் பிரதமரும் தருவதாக சொல்லியிருந்தார்.


கடந்த இரு மாதங்களுக்கு முன்பு  சாய்ந்தமருது சபைக்கான சபையை அனுமதிப்பதற்கு உரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.ஆனால் அங்கு  கல்முனையை  மாநகர சபையை 4 சபைகளாக பிறிக்க கோரி இன்னொரு  பிரிவினர் அரசியல் அழுத்தங்களை தொடுத்தார்.


ஆகவே தற்பொழுது இதனை என்னால் செய்ய முடியாதுஏற்கனவே நுவரேலியாவுக்கு 4 சபைகளும் ,பொலநனருவையை  மாநகர சபையாகவும்  தரமுயத்தி  சபைகளுக்கும் இம்முறை  தேர்தல் நடைபெறும்.  


கல்முனை மாநகர சபையாகவே இம்முறை தேர்தல் நடைபெறும்.கல்முனை மாநகரசபை  அல்லது 4 சபையாகவ 2 ஆகவா பிரிப்பது  பற்றி அங்குள்ள அரசியல் கட்சிகள், தமிழ் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்தால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறும் தேர்தலிலேயே அதனை பிரிக்க முடியும்.  


தற்பொழுது  சாய்ந்தமருதுக்கு தனியான சபையை வழங்க அங்குள்ள அரசியல்கட்சிகள் ஒருமித்த முடிபுக்கு வரல் வேண்டும் எனவும் பைசர் குறிப்பிட்டார்.



நுவரேலியாவுக்கே  சபைகள் பற்றி அமைச்சரபை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதுஅது அனுமதிக்கப்பட்டுள்ளதுஇதற்கு  கபினட் அனுமதி தேவையில்லைஎன்னால் அனுமதிக்க முடியும். இருந்தும் அனுமதி பெறப்பட்டுள்ளதுஎனக் குறிப்பிட்டார்.


இன்று(1)  உள்ளுராட்சித் தேர்தல்களை நாடத்துவதற்காக  தேர்தல் ஆணையாளருக்கு  வா்த்தமானி அறிவித்தலை  அமைச்சட் பைசர் முஸ்தபா தனது அமைச்சில் வைத்து கைச்சாத்திட்டார்.


அதன் பின்னர்  தேர்தல் ஆணையாளர் தேர்தல் நடாத்துவதற்கான  நடவடிக்கைகளை அறிவிப்பார் அமைச்சார் என தெரிவித்தார்.


சாய்ந்தமருதுக்கு தனியான சபை இப்போதைக்கு சாத்தியமில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டவட்டமாக தெரிவிப்பு ..  சாய்ந்தமருதுக்கு தனியான சபை இப்போதைக்கு சாத்தியமில்லை : அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டவட்டமாக தெரிவிப்பு .. Reviewed by Madawala News on 11/01/2017 02:11:00 PM Rating: 5