Kidny

Kidny

ராஜித பொய் கூறுகிறார் ; பேருவளை UNP பிரதான அமைப்பாளர் இப்திகார் ஜமீல் ..


உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பேருவளை தொகுதியில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய
கட்சியும் இணைந்து  பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் என அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று தெரிவித்துள்ளார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி ஆகியவற்றின் அமைப்பாளர்கள் பொது சிண்ணத்தில் போட்டியிட இணங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பேருவளை பிரதான அமைப்பாளர் இப்திகார் ஜமீல் அவர்களை நாம் தொடர்ப்புகொண்டு கேட்டபோது,


ஐக்கிய தேசிய கட்சியின் பேருவளை பிரதான அமைப்பாளராக இருக்கும் என்னிடம் ராஜித சேனாரத்ன பொது சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பிர் எதுவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் அவர் பொய்யான தகவல் ஒன்றை அவர் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பேருவளை தொகுதியில் உள்ள இரு சபைகளிலும் ஐக்கிய தேசிய முன்னனியில் யானை சின்னத்திலே போட்டியிட தாங்கள் தீர்மானித்துள்ளதாக அவத் குறிப்பிட்டார்.

ராஜித பொய் கூறுகிறார் ; பேருவளை UNP பிரதான அமைப்பாளர் இப்திகார் ஜமீல் .. ராஜித பொய் கூறுகிறார் ; பேருவளை UNP பிரதான அமைப்பாளர் இப்திகார் ஜமீல் .. Reviewed by Madawala News on 11/02/2017 01:12:00 PM Rating: 5