Kidny

Kidny

கிழக்கில் தனியான முஸ்லிம் இராஜ்ஜியமான “ நஸரிஸ்தானை ” உருவாக்குவதே முஸ்லிம்களின் அரசியல் தந்திரமாகும்.

சம்பிக்க ரணவக்கவின்அல் ஜிஹாத் அல் கைதாநூலிலிருந்து 


பாகம் 2, 
எம் எம் முஸம்மில் – (BA Hons)- பதுளை .   

தமிழீல யுத்தத்தை தோக்கடிக்கும் இலங்கை அரசின் முயற்சிக்கு முஸ்லிம்கள் எப்பொழுதும் ஆதரவு தரவில்லை. இந்த விடயத்தில் முஸ்லிம் அடிப்படைவாத அரசியல் தலைவர்கள் சிங்களவர்களுடன் ஒத்துழைத்து செயற்படவில்லை. இது அவர்களின் அரசியல் தந்திரமாகும். அஷ்ரப் , சேகு இஸ்ஸதீன் , ஒஸ்மான் ஆகியோர் இணைந்து இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாததை உருவாக்கினார்கள். இதற்கு எதிராக நான் போராடினேன். இதற்கு பதிலாகத்தான் அவர்கள் தீகவாப்பியை திட்டமிட்டு அழித்தார்கள்.( முகவுரை

அல் கைதாவுகும் புலிகளுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. புலிகள் ஆப்கானிஸ்தானில் அல்கைதாவின் பயிற்சி பெற்றிருக்கின்றார்கள் .அதே போல் பிலிப்பைன்ஸ் பிரிவினைவாத தீவிரவாதிகளானமோரோமுஸ்லிம் விடுதலை இராணுவமும் புலிகளுக்கு பயிற்சியளித்திருக்கின்றன. பிலிப்பைன்ஸ் முஸ்லிம் கரில்லாகள் தமிழ் நாட்டின் இயங்கும் முஸ்லிம் தீவிரவாத அமைப்பானஅல் உம்மாவுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். அல்கைதாவின் ஆயுதங்களை கடல்மார்க்கமாக கொண்டுசெல்ல புலிகள் உதவி செய்துள்ளார்கள். கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் அல் கைதாவிடம் பயிற்சி பெற்ற புலிகளாலேயே தாக்கப் பட்டது. (பக்கம் 249)

அஷ்ரப் உருவாக்கிய ஒலுவில் பல்கலைக்கழகம் இஸ்லாமிய தீவிரவாதத்தை போதிக்கும் தீ பிழம்பாகும்.

அல்லாஹு அக்பர்என்று கோஷமிட்டு 2003 ம் ஆண்டு ஒலுவில் பிரகடனத்தை முஸ்லிம்கள் பிரகடனப் படுத்தினார்கள். இந்த பிரகடனத்திற்கு தலைமை தாங்கிய அஷ்ரப் உருவாக்கிய ஒலுவில் பல்கலைக்கழகம் இஸ்லாமிய தீவிரவாதத்தை போதிக்கும் தீ பிழம்பாக செயல்படுகின்றதுகுறிப்பிட்ட ஒலுவில் பிரகடனத்தின் மூலம் முஸ்லிம்கள் இந்த நாட்டின் தனியானதொரு தேசிய இனம் என்றும் , முஸ்லிம்களுக் கென வரலாற்று ரீதியிலான பூர்வீக பூமிப் பிரதேசம் இங்கு உள்ளதாகவும் கூறி இந்த பூமி பிரதேசத்தில் தனியான ஆட்சி அதிகாரம் (சுயாட்சி) வேண்டுமென்றும் பிரகடனம் செய்தார்கள்

முஸ்லிம்களின் இக்கோரிக்கையினால் இந்த நாட்டில் இன்னும் எத்தனை உயிர்கள் அழியுமென்று கூறமுடியாது


தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர்   1967 ல்,வட்டுக் கோட்டையில் நடத்தப் பட்ட கருத்தரங்கில் சுதந்திர  தமிழீத்தை பிரகடனப் படுத்தினர். அதற்கு யாழ்பாண பல்கலைக்கழகம் ஆதரவு வழங்கி ஆசீர்வாதம் செய்தது. இந்த தமிழீழ பிரகடனம் தான் தற்போது 46000 பேரின் சாவுக்கு காரணமான புலிகளின் பயங்கரவாத யுத்தம் ஆரம்பித்தது. இது போன்று தான் 2003ம் ஆண்டின்  ஒலுவில் பிரகடனத்தையும் நாம் காணவேண்டும். ( பக்கம் 252,253)
கிழக்கில் தனியான முஸ்லிம் இராஜ்ஜியமான “ நஸரிஸ்தானை ” உருவாக்குவதே முஸ்லிம்களின் அரசியல் தந்திரமாகும்.  கிழக்கில் தனியான முஸ்லிம் இராஜ்ஜியமான “ நஸரிஸ்தானை ”  உருவாக்குவதே முஸ்லிம்களின் அரசியல்  தந்திரமாகும். Reviewed by Madawala News on 11/17/2017 08:58:00 AM Rating: 5