Kidny

Kidny

பிரபாகரனின் படத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள் கைது.


வடக்கில் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை
ஏந்தி மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ''வடக்கில் சிலர் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை கேக் வெட்டி கொண்டாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது

அது தொடர்பிலான விசாரணைகளை தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் நிறைவில் இவ்வாறு விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை ஏந்திக்கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களும் அவரின் புகைப்படங்களுடன் கொண்டாட்டம் நடத்தியவர்களும் கைது செய்யப்படுவார்கள். கைது செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.“ எனத் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் படத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள் கைது.  பிரபாகரனின் படத்துடன் மாவீரர் தினம் அனுஷ்டித்தவர்கள் கைது. Reviewed by Madawala News on 11/28/2017 07:50:00 PM Rating: 5