Kidny

Kidny

கல்வியமைச்சுக்கு முன்னால் இரண்டாவது நாளாக தொடர்கிறது மவ்ளவி ஆசிரியர் போராட்டம் ..




கல்வியமைச்சுக்கு முன்னால்  இரண்டாவது நாளாக தொடர்கிறது மவ்ளவி ஆசிரியர் போராட்டம்
இலங்கையின் வரலாற்றில் இது ஒரு முக்கிய கவன ஈர்ப்பைக் கொண்டுள்ள நிகழ்வாகப் பதியப்படப்போகிறது

அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த மவ்லவி - மவ்லவியாக்கள் அகோரமாகக் கொழுத்தும் வெயிலில் நேற்று கல்வி அமைச்சுக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறுதியான எந்த முடிவும் கல்வி அமைச்சரால் வழங்கப்படாததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது

2008 முதல் மவ்லவி ஆசிரியர் நியமனம் வழங்காமல் புறக்கணிக்கும் கல்வி அமைச்சின் மெத்தனப்  போக்கை கண்டித்து நடைபெறும் இந்த நியாயமான உரிமைப் போராட்டத்திற்கு செவிசாய்க்காவிட்டால் மனித உரிமை ஆணைக் குழு மற்றும் நீதி மன்றம் என்பவற்றை நாடப்போவதாகவும் இன்னும் போராட்டத்தை வீரியப்படுத்தப் போவதாகவும் இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கத்தின் செயலர் அஷ்ஷெய்க் நளீம் ஹாமி அவர்கள் தெரிவித்தார்கள்

மிகவும் கண்ணியமான முறையில் உலமாக்கள் ஒன்றிணைந்து இந்த ஜனநாயக ஆர்பாட்டத்தை அமைதியாக மேற்கொள்ளுகின்றனர்.

இனியும் அரசு அசமந்தப் போக்கைக் கடைபிடித்தால்,மிகவும் சக்தி வாய்ந்த மீடியாவான மிம்பர் மேடைகள் இது விடயத்தில் பயன்படுத்தப்பட்டு உலமாக்களின் பலம் என்ன என்பதை ஆட்சிப் பீடத்தின்குப் புரிய வைக்க வேண்டிவரும் என அங்கு கலந்து கொண்டுள்ள உலமாக்கள் தெரிவித்தனர்.


கல்வியமைச்சுக்கு முன்னால் இரண்டாவது நாளாக தொடர்கிறது மவ்ளவி ஆசிரியர் போராட்டம் ..  கல்வியமைச்சுக்கு முன்னால்  இரண்டாவது நாளாக தொடர்கிறது மவ்ளவி ஆசிரியர் போராட்டம் .. Reviewed by Madawala News on 11/16/2017 11:43:00 AM Rating: 5