Kidny

Kidny

ஊழல் மோசடிகள் நிறைந்த நிறுவனங்களை சீர் செய்வது அவசியமாகும்




ஊழல் மோசடிகள் நிறைந்த நிறுவனங்கள் காணப்படுகின்றன.அவற்றை சீர் செய்வது அவசியமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

அரச சேவையில் உள்ள குறைபாடுகளை நீக்கி, அசர ஊழியர்களுக்கு வல்லமையையும் வழிகாட்டல்களையும் வழங்கி வினைத்திறனான அரச சேவையை கட்டியெழுப்புவது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

 

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அரச நிறுவனங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் என்பவற்றின் நிதிக் கட்டுப்பாடு, செயற்றுகை என்பவற்றை மதிப்பீடு செய்து விருது வழங்கும் நிகழ்வு இன்று (13) பாராளுன்ற குழு அறையில் நடைபெற்றது

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு சுதந்திரமான முறையில் பணியாற்றும் வாய்ப்புக் தற்போது கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர்களாக இருந்தவர்களுக்கு தமது பதவியை விட்டும் செல்ல நேரிட்டிருக்கிறது. பதவி இழந்தவர்களும் உள்ளனர்.


சுமார் 14 இலட்சம் அரச ஊழியர்கள் நாட்டிலுள்ளனர். இது 13 பேருக்கு ஒருவராகும். கஷ்ட பகுதிகளில் பணியாற்றும் அரசாங்க ஊழியர்கள் சிறந்த சேவையாற்றி வந்துள்ளனர்


இவர்கள் பிரதேச அரசியல்வாதிகளுக்கு நல்லது, கெட்டதை எடுத்துக் கூற அஞ்சவில்லை.இவர்களின் முதுகெழும்பை அரசியல்வாதிகள் உடைத்தார்கள்.கணக்காய்வு அதிகாரி ஒருவருக்கு கண்டியில் வைத்து அசிட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

 

ஆயினும் தற்போது மீண்டும் முதுகெலும்புடன் பணிபுரியும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது.நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றன. அரச சேவையை சிறப்பானதாக மாற்ற வேண்டும்


2015 மாற்றத்தினூடாக இதற்கான அடித்தளம் இடப்பட்டது. 25 - 30 வருடங்கள் நீடித்த இந்த நிலைமையை ஒரேயடியாக மாற்ற முடியாது.சகல அரச அதிகாரிகளும் முன்மாதிரியாகவும்  பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.

 

சிறப்பாக செயற்பட்ட அரச நிறுவனங்களுக்கு இன்று தங்க, வெள்ளி விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டன.இதே போன்று இந்த பட்டியலில் இறுதியில் உள்ள மோசமாக செயற்பட்ட நிறுவனங்களையும் அழைத்து இவ்வாறு தங்க, வெள்ளி விருதுகள் வழங்க வேண்டும்


அவற்றின் குறைபாடுகளை திருத்தி இதே போன்று சிறந்த நிலைமைக்கு மாற்ற வேண்டும் கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் அரச ஊழியர்களுக்குநேரடித் தீர்மானத்தின் கீழ் பணியாற்றுவதற்காக வாய்ப்புக் கிடைக்கவில்லை. நேர்மையான ஊழியர்களுக்கு பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது  

 

அமைச்சுக்கள் உட்பட 81 நிறுவனங்கள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டன.நேர்மையாக பணியாற்றிய கோப் குழுவின் தலைவர்களுக்கும் பதவியை இழக்க நேர்ந்தது தங்க விருது வழங்கப்பட்ட அரச நிறுவனங்களிடையே கணக்காய்வு திணைக்களத்திற்கு முதலிடமும் பிரதமர் அலுவலகம், தேர்தல் திணைக்ளம் என்பவற்றுக்கு முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களும் கிடைத்தன என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு மேலும் தெரிவித்தார்.

 

பிரதமர் ரணில்விக்கரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊழல் மோசடிகள் நிறைந்த நிறுவனங்களை சீர் செய்வது அவசியமாகும்  ஊழல் மோசடிகள் நிறைந்த நிறுவனங்களை சீர் செய்வது அவசியமாகும் Reviewed by Madawala News on 11/13/2017 11:11:00 PM Rating: 5