Kidny

Kidny

சூடு பிடித்துள்ள இலங்கை அரசியல் களம் ! ரனில்,மலிக் சிங்கப்பூர் பறந்தனர்..


இலங்கை அரசியல் அரங்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து கிடைக்கும்
செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரது நெருங்கிய நண்பர் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாகவும் இதனால் இந்த சூடு மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை இரவு பிரதமர் மற்றும் அவரது நண்பரும் சிங்கப்பூருக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தப் பயணத்தின் நோக்கம் வெளியிடப்படவில்லை.நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில்  பிரதமர் திடீரென சிங்கப்பூர் சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி கூட்டு எதிர்கட்சி இடையே சமரச பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலும் மத்திய வங்கி ஊழல் மோசடி தொடர்பில் ஜனாதிபதி  கடும் கருத்து வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் சிங்கப்பூர் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சோபித தேரரின் நினைவு நாள் நிகழ்வில் மத்திய  வங்கி ஊழல் தொடர்பில் ஜனாதிபதி கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது. 

சூடு பிடித்துள்ள இலங்கை அரசியல் களம் ! ரனில்,மலிக் சிங்கப்பூர் பறந்தனர்..  சூடு பிடித்துள்ள இலங்கை அரசியல் களம் ! ரனில்,மலிக் சிங்கப்பூர் பறந்தனர்.. Reviewed by Madawala News on 11/12/2017 09:47:00 PM Rating: 5