Kidny

Kidny

முஸ்லிம்களுக்கு சுயாட்சி அலகு


வழங்கத் தயார் என்கிறார் மாவை
தமி­ழர்­களின் தாயக பூமி­யான வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்டு
சமஷ்டி அடிப்­­டையில் உள்­ளக சுய­நிர்­­யத்­து­­னான அதி­கா­ரப்­­கிர்வு செய்­யப்­பட்டு நியா­­மான தீர்­வொன்று வழங்­கப்­­­வேண்டும். இதன்­போது முஸ்­லிம்­களும் தமி­ழர்­­ளுடன் சகோ­­ரர்­­ளாக வாழும் வகை­யி­லான அவர்­களின் அபி­லா­ஷை­களை நிறை­வேற்­றக்­கூ­டி­­வா­றான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­­தற்கும் தயார் என  தமிழ்த் தேசியக் கூட்­­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை தமி­ழரசுக்­கட்­சியின் தலை­­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

அர­சி­­­மைப்பு சபையில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை புதிய அர­சி­­­மைப்­புக்­கான வழி­­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­­வாறு தெரி­வித்தார்

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்

 நாம் இணைந்த வட கிழக்கில் அதி­கா­ரங்கள் பகி­ரப்­பட்ட சமஷ்டி முறை­மையை கோரு­கின்­­போது தற்­போது முஸ்லிம் சகோ­­ரர்கள் சிலர் அதனை எதிர்க்­கின்ற நிலை­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது

கடந்த காலத்தில் பெருந்­­லைவர் அஷ்­­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட புரிந்­து­ணர்வின் படி வட­கி­ழக்கின் பூர்­வீக சகோ­தர இனத்­­வர்­­ளான தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் இணைந்தே அதி­கா­ரங்­களை பகிர்ந்து கொள்­­தெ­னவும் விசே­­மாக வடக்கு கிழக்கு இணை­கின்­­போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் வகை­யி­லான சுயாட்சி அல­கொன்றை வழங்­கு­­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். அது குறித்து நாம் தற்­போ­தைய தலை­மை­­ளு­டனும் பேசு­­தற்கு தயா­ரா­கவே இருக்­கின்றோம்.

கிழக்கு மாகாண சபையில் நாம் கூட்­டணி ஆட்­சியை முன்­னெ­டுத்­துள்ளோம். முஸ்லிம் பிர­தி­நி­தியை முத­­மைச்­­ராக நிய­மிக்க அங்­கீ­கா­­­ளித்­துள்ளோம். ஆகவே முஸ்லிம் சகோ­­ரர்­­ளுக்கு நாம் அநீதி இழைக்­கப்­போ­­தில்லை

இணைந்த வடக்­கி­ழக்கில்  தமிழ் மக்களுக்கான அதிகாரங்களை பகிர்கின்றபோது முஸ்லிம்களின் விடயத்தினையும் நாம் கருத்தில் கொள்வோம். ஆகவே அதற்கான கலந்துரையாடல்களை இதய சுத்தியுடன் முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுகின்றோம் என்றார்

முஸ்லிம்களுக்கு சுயாட்சி அலகு  முஸ்லிம்களுக்கு சுயாட்சி அலகு  Reviewed by Madawala News on 11/02/2017 01:14:00 AM Rating: 5