Kidny

Kidny

வடட்டமடு விவசாயிகளை உள்ளிருந்து கருவறுக்கும் நரி.


தம்பி லெப்பை சலீம்-
வட்டமடு விவசாயிகளின் போராட்டம், அவர்களது நில உரிமையை பெற்றுக் கொள்வதற்கான
வீதி மறியல், தொடரான உண்ணாவிரதம் என்பன தாம் இழந்த காணிகளை மீட்க எடுக்கின்ற முயற்சிகளாகும்

நாளை அந்த விவசாயிகள் ஹர்த்தால் அனுஷ்டிக்க கோரி இருக்கின்ற சூழலில் வட்டமடுவை அரசியலாக்கி அதில் இன்று வரை குளிர் காய்ந்து மக்களை வீதிகளுக்கு கொண்டு வந்து விட்ட கதையும், உள்ளிருந்து அந்த மக்களின் காயத்தை ஆற்றாமல் "ஒடு" விழ வைத்த நரியின் ஆட்டம் தொடர்பிலும் நியாயங்களை புரிந்து கொள்ளும் மக்களுக்காக சில அவதானமிக்க வயதான பக்குவ பட்டவர்களது வார்த்தைகளை முன் வைக்கிறோம்.

வட்டமடு விவசாய பயிர்ச் செய்கையாளர்களது பிரச்சினை  தோற்றுவிக்கப்பட்ட போது அன்றைய அமைச்சர் சுசில் பிரம ஜெயந் உடன் நேரடியாக பேசி காணிக் கச்சேரியை நிறைவடைய செய்து வட்டமடு விவசாயிகளை காணிகளுக்குள் செல்லுமாறு அன்றைய அதிகாரத்தில் இருந்தவர்களால் அறிவுறுத்தப்பட்ட போது அதை நான்தான் செய்தேன் என பெயர் வாங்க முந்தியடித்து கொண்டு தனக்கு விசுவாசமான ஒரு சிலரை வைத்து அந்த முயற்ச்சியை  தோற்கடித்தது யார்?

திருகோணமலையில் வைத்து இடம்பெற்ற பண்ணையாளர்கள், விவசாயிகளுடான உயர் பீட சந்திப்பின் பின்னர் நியாயமான தீர்வுகளும் அன்றைய அதிகாரத்தில் இருந்தவர்களால் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்ட பின்னர் இரவோடிரவாக பண்ணையாளர்களின் வீடு தேடி சென்று உங்களுக்கு அநீதி நிகழ்ந்து விட்டது என கூறி பிரச்சினையை இரண்டாவது முறையாகவும் தடுத்து இன்று விவசாயிகளுக்கு நீதி வேண்டுமென (பிச்சைக்காரனின் புண்ணாக) தொடர வைத்து  என கூவி திரிகின்ற தந்திர நரி எது?

மூன்றாவது சந்தர்ப்பமாக ஜனாதிபதியுடனான நேரடி இணக்கப்பாட்டுடன் ராணுவ உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின் அனுமதி தருவதற்கான அணைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்த வேளையில் பிரச்சினை யாராலும் தீர்ந்து விடக் கூடாது என நீதிமன்றம் சென்று விவசாயிகளை தற்காலிக பிரச்சினையை நிரந்த வடுவாக தமது அரசியலுக்காக காட்டித் திரியும் (பிச்சைக் காரனின் புண் போல ) குள்ள நரி எது?

மகிந்தவினுடைய ஆட்சியும் அதன் அதிகாரம் செறிந்தவர்களும் தீர்வை பெற்று தரவில்லை என நல்லாட்சியை உருவாக்க அந்த விவசாயிகளை பகடைக்காயாக பயன்படுத்தி அரசியல் விளையாடியவர்கள்  இன்று நல்லாட்சி அரசின் பங்காளிகளாக அமைச்சர்களாக உள்ள தலைவர்களின் கையாலாகத தனத்தை ஏற்றுக் கொண்டு விட்டு நேரடியாக களம் காண வேண்டிய தேவை இருக்க தக்கதான நிலை இருக்கிறது.

ஆனால் பின்னால் இருந்து ஒழித்து விளையாடுவது எதற்க்காக?

தமிழ் தலைவர்களும், முஸ்லீம் பிரிநிதிகளும் மேசை ஒன்றக்கு நகர்ந்து பேச வேண்டிய காலம் கனிந்து வரும் சூழலில் அண்மையில் இது தொடர்பில் தோழர் டக்ளஸ் தேவானந்தா கூட பாராளுமன்றில் உரையாற்றி இருந்தார்,

இவ்வாறான வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில் ஹர்த்தால் சொல்லவரும் செய்தி என்ன?

நாளை தமிழ் இந்துவ வாதிகளும்,ஹெல உறுமய போன்றவர்களும் திருக்கோவிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்து  பிரச்சினையை பூதாகரமாக்கி இன்னுமொரு அரசியல் தேவைக்காக காத்திருக்க வைக்க போகிறார்கள் என்பதை  விளங்கி கொள்ள முடிகிறது.

பிரச்சினைகள் தீர்வை அடைய வேண்டுமென்றால் சுய நல அரசியல் சக்திகளையும், பிரச்சினைகளின் மீதெறி பயணிக்கும் அரசியல் கோமாளிகளையும் இல்லாதொழிய வேண்டும்

இவ்வாறுதான் இதே நரி நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்ட மக்களை மகிந்த காலத்தில் வீதிக்கு இறக்கி 
அவர்களை படாதபாடு படுத்தி விட்டு இன்று கணக்கிலெடுக்காத கோலமும்

வட்டமடு விவசாயிகளிடம் வேலை பார்க்க கொழும்புக்கு செல்ல பணம் வசூலிப்பதும், பின்னர் பழைய குருடி கதவை திறடி எனும் நிலையையும நரி பேணி வருகிறது 
சரியான சந்தர்ப்பத்தில் பிழையான முடிவுகளை பெற தூண்டுபவர்களால் ரிகின்ற நெருப்பில் எண்ணைய் ஊற்ற முடியும்அ ணைக்க முடியாது என்பது திண்ணம்
வடட்டமடு விவசாயிகளை உள்ளிருந்து கருவறுக்கும் நரி.  வடட்டமடு விவசாயிகளை உள்ளிருந்து கருவறுக்கும் நரி. Reviewed by Madawala News on 11/27/2017 01:01:00 AM Rating: 5