Kidny

Kidny

தேர்தலை பிற்போட கூட்டு எதிர்கட்சி சதி !


நீதிமன்ற செயற்பாட்டின் ஊடாக உள்ளுராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைப்பதே கூட்டு
எதிர்க்கட்சியின் நோக்கமாகும் என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

நீதிமன்றத்திற்கு செல்லும் உரிமை அனைவருக்கும் உண்டு .அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.இந்த தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கம் யாருக்கு உண்டு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பின் போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாகவும் இம்முறை வரவுசெலவுத்திட்டம் தொடர்பாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்காக நேற்றைய தினம் கூட்டு எதிர்க்கட்சியினரை சேர்ந்த சிலர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது தேர்தல் நடத்தப்படவேண்டும் அதற்கு வழிசெய்யவேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் கூட்டு எதிர்க்கட்சியினரே.

தேர்தலை நடத்துவதற்கு தற்பொழுது ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பொழுது கூட்டு எதிர்க்கட்சியினர் தமது கைக்கூலிகளை பயன்படுத்தி தேர்தலுக்கு எதிராக செயற்படுகின்றனர் என்றும் பிரதி அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.

தேர்தலை பிற்போட கூட்டு எதிர்கட்சி சதி !  தேர்தலை பிற்போட கூட்டு எதிர்கட்சி சதி  ! Reviewed by Madawala News on 11/16/2017 10:56:00 AM Rating: 5