Kidny

Kidny

மஹிந்தவின் ஆதரவை நாடும் சம்பந்தன் ..




புதிய அரசியலமைப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்
இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார். ஆனால் தீர்வு காணப்படவில்லை. இதனாலேயே மக்கள் இவரை தெரிவு செய்யவில்லை.

தற்போதை ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் தெரிவு செய்யப்பட்டனர் . நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை முன்னெடுக்கவேண்டும் என்றே மக்கள் இவர்களை தெரிவு செய்தனர்.

புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டதுடன் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சபையில் பிரசன்னமாகியிருந்த வேளையிலேயே இந்தக் கோரிக்கையை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் நேரடியாக முன்வைத்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

மஹிந்த ராஜபக்ஷ இணங்கிக் கொண்ட யோசனைகளின் அடிப்படையிலேயே புதிய அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அப்படியாயின் அரசியல் அமைப்பு உருவாக்க திட்டம் மற்றும் சமாதான முயற்சிகளுக்கு ஏன் ஆதரவு வழங்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒன்றுபட்ட மக்கள் பிரிக்கப்படாத நாடொன்றுக்குள் வாழ வேண்டும். இதற்கு தாங்கள் உதவ வேண்டும். அதிகாரத்தை கைபற்ற வேண்டுமாயின் அதனை எந்த வழியிலாவது மேற்கொள்ளலாம். ஆனால் அதற்கு புதிய அரசியல் அமைப்பை பயன்படுத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்போரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது கேட்டுக்கொண்டுள்ளார்.
மஹிந்தவின் ஆதரவை நாடும் சம்பந்தன் ..  மஹிந்தவின் ஆதரவை நாடும் சம்பந்தன் .. Reviewed by Madawala News on 11/16/2017 10:27:00 PM Rating: 5