Kidny

Kidny

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒன்றிணைப்பதற்கு ஜனாதிபதி தயார்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஈடுபட்டு
இருப்பதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒன்றிணைந்த வகையில் அர்பணிப்புடன் செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக இருக்கிறார் என்று அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது விஞ்ஞான,தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கூட்டு எதிர் கட்சியினருடன் தொடர்புபட்டு இருப்பதாக செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அமைச்சரவை துணை பேச்சாளர் தயசிறி ஜயசேகர பதிலளித்தார்.

கூட்டு எதிர் கட்சியுடன் உடன்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியிலேயே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஈடுப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தியாளர்: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கு முன்னரும் இவ்வாறான முயற்சி மேற்கொண்டு ஏமாற்றப்பட்டதாக தெரிவித்துள்ளாரே?

அமைச்சர் தயசிறி ஜயசேகர : நாமும் அந்த மாதிரயான அனுபவத்திற்கு உள்ளானோம். ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த போது தலைமைத்துவம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டதினால் கட்சியில் இருந்து வெளியேறவேண்டி ஏற்பட்டது என்றும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒன்றிணைப்பதற்கு ஜனாதிபதி தயார்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒன்றிணைப்பதற்கு ஜனாதிபதி தயார் Reviewed by Madawala News on 11/15/2017 03:42:00 PM Rating: 5