Kidny

Kidny

ஜனாதிபதி பிரதமர் இன்று இரவு முக்கிய சந்திப்பு ..


மைதிரியும் மஹிந்தவும் இணைந்து தேர்தலுக்கு வந்தால் ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்
என ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் சிலரிடன் பிரதமர் ரனில் விக்ரமசிங்க கேட்டுள்ளார்.

இன்று நன்பகல் நாவலப்பிட்டி பகுதிக்கு நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பிரதமர் அதனை தொடர்ந்து அங்கு இடன்பெற்ற கலந்துரையாடலில்  ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்களிடம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள் அவர்கள் இணைந்து வந்தால் கடும் போட்டி ஒன்றை எதிர்நோக்க வேண்டி வரும் என அவரிடம் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமையை தொடர்ந்து இன்று இரவு ரனில் மைத்திரி சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் இன்று இடம்பெற்றால் மகிந்த அணியை இணைந்துக்கொண்டு களமிறங்க வேண்டும் என சு முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதியிடம் கூறியுள்ள நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேர்தல் முறையில் பெரும்பான்மை இணத்திற்கே அதிகமான வெற்றி வாய்ப்புகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பிரதமர் இன்று இரவு முக்கிய சந்திப்பு ..  ஜனாதிபதி பிரதமர் இன்று இரவு முக்கிய சந்திப்பு .. Reviewed by Madawala News on 11/26/2017 07:41:00 PM Rating: 5