Ad Space Available here

புலம்பெயர் LTTE வலையமைப்பு ஈழம் ஒன்றை அடைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.


முப்படைத் தளபதிகளின் அதிகாரியான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவ வரலாற்றில் முதன் முறையாக ஆயுதப் படையான இராணுவப் படையினரைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

கொழும்பு இராணுவ மருத்துவமனைக் கோட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் wஇடம்பெற்ற இந்த சந்திப்பில் 350 இராணுவ கட்டளை அதிகாரிகள் , இராணுவ நிறைவேற்று பணிப்பாளர்கள் மற்றும் இராணுவ ரெஜிமென்ட் சார்ஜட்கள் (ஆர் எஸ் எம் ஐ) கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்விற்கு வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான திரு கபில வைத்தியரத்தின மற்றும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

 

இராணுவ பிரதி பதவிநிலை அதிகாரியான மேஜர் ஜெனரல் தம்பத் பெணான்டோ ஜனாதிபதி உள்ளிட்ட இராணுவ அதிகாரிகளை இராணுவ மரியாதைகளுடன் வரவேற்றார்.

 

இந்த கலந்துரையாடலிற்கான ஒழுங்குகளை முழு ஒத்துழைப்புடன் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதியவர்களுக்கு நாட்டிற்கான சேவைகள் குறித்து தமது நன்றிகளைத் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,

 

நாட்டிற்காக பல சந்தர்பங்களில் ஏற்பட்ட சர்வதேச இயற்கை அனர்த்தங்களின் போது தமது உயிரைத் துச்சமாக மதித்து அர்பணிப்போடு செயற்பட்டுள்ளீர்கள். மேலும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட அனர்தங்களான மண்சரிவு நிலைமைகளில்.  லைமைத்துவம் தாங்கி செயற்பட்டுள்ளீர்கள். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக சமாதானத்துடன் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு உங்களது ஒத்துழைப்பு மிக அவசியம் என்ற தெரிவித்தார்.

 

நாட்டின் தலைவனாக நான் இருக்கும் வரை போலி யுத்த குற்றச்சாட்டுகள் இடம் பெறமாட்டாது. அத்துடன் யாதாயினும் குற்றம் ஏற்றபடின் அது தொடர்பான நடவடிக்கைகளை நாட்டின் தற்போதைய நீதிக்கமைவான நீதிமன்றத்தினாலாகும்.

 

மேலும் அரசியல்வாதிகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் போன்றோல் இராணுவப் படையினரை யுத்த குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனை வழங்க வேண்டும் என கூறும் கருத்திற்கு நாட்டின் ஜனாதிபதியாகிய நான் எவ்விதத்திலும் உடன் படுவதில்லையெனவும் தெரிவித்தார்.

 

மேலும் வெளிநாட்டு நீதிபதிகளின் முன்னிலையில் கேள்விகள் எழுப்புவதற்கு தான் இடமளிக்கப்போவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

உலகின் எவ்வித மனித உரிமைகள் அமைப்பிற்கும் இலங்கை இராணுவத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை மேற்கொள்ள தான் இடமளிப்பதில்லை. அத்துடன் எமக்குரிய பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளும் திறமை எம்மிடம் உள்ளதை ஐக்கிய நாடுகள் சபை அறிந்திருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மேலும் சில தறவறான வாய்பேச்சுகளிற்கு நீங்கள் செவிசாய்க்காது என்னில் நம்பிக்கை வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.அத்துடன் அனர்த்தங்களின் போது ஒத்துழைப்புடன் செய்பட்ட உங்களது அளப்பரிய திறமை மிக்க சேவைகள் போன்று ஒரு தாய் நாட்டினராக நாட்டின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான செயற்படல் வேண்டும்.மேலும் எதிர் காலங்களில் இராணுவ வீரர்களுக்கான வெளிநாட்டுப் பயணங்களில் எவ்வித தடைகளும் ஏற்படுவதில்லையெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

பல சிரமங்களின் மத்தியில் பெற்றுக் கொண்ட இந்த சமாதானத்தை மேலும் மேப்படுத்த அரசினால் முக்கியத்துவம் எடுக்கப்படுவதோடு உலகின் மிகச் சிறந்த இராணுவமாக திகழ அதற்குறிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

 

இநத் நிகழ்வின் இறுதியில் தேநீர் விருந்துபசாரம் இடம் பெற்றதோடு இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட இராணுவத்தினருடன் ஜனாதிபதி கருத்துக்களையும் பரிமாறினார்.

புலம்பெயர் LTTE வலையமைப்பு ஈழம் ஒன்றை அடைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. புலம்பெயர் LTTE வலையமைப்பு  ஈழம் ஒன்றை  அடைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. Reviewed by Madawala News on 11/11/2017 10:28:00 AM Rating: 5