Kidny

Kidny

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படாத நிலையில் இன்று தேர்தல் ஆணைக்குழு இன்று கூடுகிறது



உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விசேட தீர்மானமொன்றை மேற்கொள்வதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று  பிற்பகல் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இன்று  எடுக்கப்படும் இந்த விசேட தீர்மானம் நாளை மறுதினம்  திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதேநேரம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் குறித்து சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (24) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தீர்மானங்கள் இன்றி கலைந்து சென்றதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.


இக்கூட்டத்தில் ஒன்றுபட்ட கட்சித் தலைவர்கள் எந்தவித காத்திரமான தீர்மானங்களும் இன்றி பிரிந்து சென்றதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சட்ட மா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ஆகியோர் தேர்தலை விரைவுபடுத்த வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இக்கூட்டத்தில் கட்சித் தலைவர்களினால் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நடவடிக்கைகளை அவசரப்படுத்தி குறித்த வழக்கில் கூறப்படும் பிரச்சினைக்கு தீர்வு வழங்கல் என்பது முதலாவது யோசனையாகவும், நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போதே பாராளுமன்றத்தில் விசேட சட்டமொன்றை நிறைவேற்றி குறித்த வர்த்தமானியில் உள்ள குறையை நிவர்த்தி செய்தல் என்பதனை இரண்டாவது யோசனையாகவும் முன்வைத்துள்ளனர்.


இதேவேளைஉள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு மற்றுமொரு கட்சியிலிருந்து யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படாத நிலையில் இன்று தேர்தல் ஆணைக்குழு இன்று கூடுகிறது கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்படாத நிலையில்  இன்று தேர்தல் ஆணைக்குழு இன்று கூடுகிறது Reviewed by Madawala News on 11/25/2017 10:23:00 AM Rating: 5