Kidny

Kidny

அரசாங்கம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்திய வருகின்றது.


நெத்தலி ,உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் ,பருப்பு வகை ,கருவாடு, தேங்காய் எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டுகான வரவு செலவு திட்டத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பினை அரசாங்கம் மேற்கொள்ள தீர்மானித்தாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

 

நாளை இடம் பெறவுள்ள வரவு செலவு திட்டத்தில் நாட்டின் அபிவிருத்தியை முன் நிலைப்படுத்திய முன்மொழிவுகள் இடம்பெறவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

அத்தியவசிய சில பொருட்களுக்காக இறக்குமதி வரி குறைப்பு தொடர்பாக அறிவிப்பதற்காக நிதி அமைச்சில் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்  இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

 


சமகால நல்லாட்சி அரசாங்கம் பதிவிக்கு வந்த பின்னர் 2015 ம் ஆண்டு பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசாங்கம் குறைத்தது.இந்த விலை குறைப்பு 2014ம் ஆண்டு இருந்த பொருட்களின் விலையிலும் பார்க்க மிக மிகக் குறைவாகும்.

 

வாழ்க்கை செலவு சுமையிலிருந்து பொது மக்களை மீட்டெடுக்கும் பொருட்டு இந்த விலைக்குறைப்பை பெரும் சிரமத்திற்கு மத்தியில் அரசாங்கம் மேற்கொண்டது.

 

சமீபத்தில் சமையல் எரிவாயுவின் விலை சிறிய தொகையில் குறைக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பெரும் சுமையாக இல்லை எனறும் அமைச்சர் சுட்டிகாட்டினார்.

 

தேங்காய் எண்ணெய்க்கான இறக்குமதி குறைக்கப்பட்டிருப்பதால் சந்தையில் தேங்காயின் விலையும் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

நெத்த்லி உருனை பெரிய வேங்காயம் பருப்பு வகை கருவாடு தேங்காய் இவற்றிக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அரசாங்கம் 1500 மில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளது.


நாளை இடம் பெறவுள்ள வரவு செலவு திட்டதின் மூலம் நீண்டகாலத்திற்கு மக்களுக்கு நிவாரணத்தை வழங்ககூடிய முன்மொழிவைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.


இது தொடர்பான விபரங்களை நாளையத்தினமே அறிந்து கொள்ளமுடியும் என்று அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

 

இங்கு உறையாற்றி நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன,


அரசாங்கம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்திய வருகின்றது.

 

நாளை நடைபெறவுள்ள வரவு செலவு திட்டத்தில் நாட்டின் அபிவிருத்தி ,கல்வி பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றிற்கான திட்டம் முன்மொழியப்படவுள்ளன. 
சமகால நல்லாட்சி அரசாங்கம் இரண்டரை வருட கால பகுதிக்குள் 3 முறை பொருட்களின் விலைகளை குறைத்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்திய வருகின்றது.  அரசாங்கம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் முக்கிய கவனம் செலுத்திய வருகின்றது. Reviewed by Madawala News on 11/08/2017 05:57:00 PM Rating: 5