Kidny

Kidny

ஒரு ஊர் முற்றாக எரிவது தடுக்கப்பட்டது..

எமது மக்கள் எவ்வாறானவர்கள் என்றால் ஒரு பிரச்சினை எழுகின்ற போது குறித்த இடத்துக்கு சென்றால் படம்
காட்ட சென்றார் என்பார்கள் செல்லாது போனால் செல்லவில்லை என ஏசுவார்கள். எமது மக்களின் மனோ நிலைகளும் எமது அரசியல் வாதிகள் தவறான பாதையில் பயணிக்க பிரதான காரணமாகும் என்பதை இங்கு சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாக கருதுகிறேன். சில விடயங்களில் அரசியல் செய்யலாம். இது அரசியலுக்கு அப்பால் சென்று பார்க்க வேண்டிய ஒரு விடயமாகும்.

பிரச்சினை நடக்கின்றது என அறிந்ததும் அமைச்சர் றிஷாத் மன்னாரில் இருந்து குறித்த இடம் நோக்கி நடு ராத்திரியில் பயணமாகி இருந்தார். இவர் படம் காட்டும் அரசியலை செய்வதற்காகத் தான் சென்றார் என்பவர்கள் ஏனைய முஸ்லிம்கள் அரசியல் வாதிகள் படம் காட்டும் அரசியலில் விருப்பமில்லாதவர்களா என்று சற்று சிந்தனை செய்து பாருங்கள். தேநீர் கடையில் ஜம்பருடன் தேநீர் அருந்துவதை கூட புகைப்படம் பிடித்து பிரபலம் தேடும் அரசியல் வாதிகள் தங்களுக்கு இயலுமாக இருப்பின் குறித்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தாமலா இருந்திருப்பார்கள். அமைச்சர் ஹக்கீம் கொழும்பில் தான் இருந்ததாக கூறப்படுகிறது. மிகக் குறுகிய நேரத்துக்குள் சென்று பிரபலம் தேடக் கூடிய சந்தர்ப்பத்தை ஏன் விட்டார்?

அவர்கள் குறித்த சந்தர்ப்பத்தில் செல்லாமல் விட்டது அவர்களது சுய பாதுகாப்பை அடிப்படையாக கொண்டே தவிர வேறு எதுவுமாக இருக்காது. ஒரு இடத்தில் இன ரீதியான முரண்பாடுகள் நிகழும் போது அந்த இடத்துக்கு செல்லும் யாராக இருந்தாலும் தாக்கப்படலாம். மக்கள் சக்திகள் முன்பு பாதுகாப்பு படைகள் கூட ஈடு கொடுக்க முடியாது என்பதே உண்மை. அங்கு செல்ல வேண்டாம் என பாதுகாப்பு படைகள் எச்சரித்த போதும் அதனை மீறிச் செல்வதற்கு அலாதித் துணிவு வேண்டும். அவர் யுத்த காலத்தில் கூட வன்னிக் காட்டுக்குள் அரசியல் செய்தவர் என்பதால் இதுவெல்லாம் ஒரு பெரிய விடயமாக அவருக்கு தெரிந்திருக்காது.

ஒரு அமைச்சர் குறித்த இடங்களுக்கு செல்லும் போது அவரை பாதுகாக்க பாதுகாப்பு படையினர்  விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாக வேண்டும். அந்த விசேட பாதுகாப்பு அவருக்கும் அவரை சுற்றி உள்ளவர்களுக்கும் வழங்கப்படும். ஏதோ ஒரு வருகையில் அமைச்சர் றிஷாதின் மூலம் அந்த மக்களுக்கு ஒரு சிறு பாதுகாப்பாவது வழங்கப்பட்டிருக்கும். ஒரு அரசியல் தலைவர் அங்கு செல்லும் போது தங்களை பாதுகாப்பதற்கான அரசியல் ரீதியல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்ற நம்பிக்கை அந்த மக்களுக்கு பிறக்கும். அந் நேரத்தில் இப்படியான நம்பிக்கைகளை வார்த்தைகளால் கூறி விட முடியாது என்பதே உண்மையாகும்.

குறித்த இடத்தில் நடந்த அசம்பாவிதங்களுக்கு பாதுகாப்பு படையினரையும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இப்படியான நிலையில் அமைச்சர் ஹக்கீம் பாதுகாப்பு படையினரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுத்தாராம் என கூறி உரிய நேரத்தில் செல்லாத அமைச்சர் ஹக்கீமை நியாயப்படுத்தும் சமூகத் துரோகியான அறிவாளிப் போராளியும் இல்லாமலில்லை. குறித்த இடத்தில் ஒரு அமைச்சர் உள்ள போது அவர் முன்னால் சட்டத்தை மீறி பாதுகாப்பு படையினர் இனவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது. பாதுகாப்பு படையினரே அவ் இனவாதிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருந்த போது அமைச்சர் றிஷாதின் செல்லுகை மிகவும் அவசியமானது என்பதில் எந்தவித சிறு சந்தேகமுமில்லை. இப்படி அவரின் செல்லுகை அவசியமானது என்பதற்கு எத்தனையோ விடயங்களை கூறலாம். அவர் அங்கு செல்லுவது போன்று சென்றுஇ பாதுகாப்பு படையினர் செல்ல அனுமதிக்க வில்லை என கூறிஇ ஏதாவது ஒரு ஆதாரத்தை வெளியிட்டு கூட பிரபலம் தேடுவதென்றால் தேடியிருக்கலாம். உயிரை பணயம் வைத்து இப்படி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை.

அமைச்சர் றிஷாத் நடு ராத்தியில் இடை நடுவில் புகுந்ததாகவும் அல்லாது போனால் ஊரின் அரை வாசி பற்ற வைக்கப்பட்டிருக்கும் என ஒரு பிரதேச வாதி அங்கு சென்ற சில முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் அவரது வருகையின் முக்கியத்துவம் பற்றி வாக்குமூலம் அளிப்பதை நான் இணைத்துள்ள காணொளியின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அமைச்சர் றிஷாத் போன்று களம் விரைந்து செயற்படும் அரசியல் வாதியே எமக்கு தேவையானவர்களாவர். யார் சமூக நோக்கத்துக்காக நல்லது செய்தாலும் பாராட்டி ஊக்குவிப்பபவனே உண்மையான மனிதனாவான். நமது ஊக்குவிப்பே இவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவர்களை இதே மாதிரி செய்யத் தூண்டும்.

துறையூர் .கே மிஸ்பாஹுல்ஹக்
சம்மாந்துறை.
ஒரு ஊர் முற்றாக எரிவது தடுக்கப்பட்டது.. ஒரு ஊர் முற்றாக எரிவது தடுக்கப்பட்டது.. Reviewed by Madawala News on 11/22/2017 02:28:00 AM Rating: 5