Kidny

Kidny

மஹிந்த பெற்ற கடனை முழுமையாக செலுத்த முடியாமையினால் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய நேர்ந்தது ..



இனவாதத்தைத் தூண்டி அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றுவரும் அரசியல் தலைவர்கள் நாடு பற்றி ஒருபோதும் சிந்திப்பதில்லை என்று ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட அதிக அளவிலான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக நல்லாட்சி அரசாங்கம் கூடுதலான நிதியைச் செலவிட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பெற்றுக்கொண்ட கடன் தொகையை முழுமையாக செலுத்த முடியாமையினால் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய நேர்ந்ததாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் அரசாங்க சொத்துக்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடுத்து அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

மஹிந்த பெற்ற கடனை முழுமையாக செலுத்த முடியாமையினால் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய நேர்ந்தது ..  மஹிந்த பெற்ற கடனை முழுமையாக செலுத்த முடியாமையினால் நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்ய நேர்ந்தது .. Reviewed by Madawala News on 11/25/2017 11:36:00 AM Rating: 5