Kidny

Kidny

இஸ்ரேல் அரபு நாடுகளுடன் பலமான ஒத்துழைப்பை கொண்டுள்ளது..


தங்கள் நாடு அரபு நாடுகளுடன்  "பலமான ஒத்துழைப்பை" கொண்டுள்ளதாக இஸ்ரேலிய
பிரதம மந்திரி பெஞ்சமின் நெடான்யாகு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

ஈரானிய செல்வாக்கின் மீது அச்சம் ஏற்பட்டிருப்பதால்,அவர்களின் எதிரிகளை நெருக்கமாக ஒன்று சேர்த்து பயணிப்பதாக தோன்றுவதாக அவர் கூறியுள்ளார்.

அரேபிய நாடுகளுடன் எங்களது பயனுள்ள ஒத்துழைப்பு பொது இரகசியமாக உள்ளது, ஆனால் அவர்களோடு உறவு முதிர்ச்சியடையும் என்றும் இது சமாதான வட்டத்தை அதிகரிக்க அனுமதிக்கும் என நான் நம்புகிறேன் "என அவர் தெரிவித்தார்

இஸ்ரேலின் நிறுவனர் டேவிட் பென் குரியன் மரணத்தின் 44 வது ஆண்டு நிறைவு நிகழ்வில் இதனை குறிப்பிட்டார்.

ஷியா வளர்ந்துவரும் வல்லமை குறித்து சுன்னி அரபு நாடுகளுடன் பகிர்ந்து கொண்ட கவலைகள் மத்திய கிழக்கு முழுவதும் இராஜதந்திர ரீதியான மறுசீரமைப்பை ஏற்படுத்தக்கூடும் என்று இஸ்ரேல் அதிகாரிகள் பலமுறை கூறியுள்ளனர்.

மத்திய கிழக்கைக் கட்டுப்படுத்தும் ஈரானின் திட்டங்களை முறியடிக்க சவுதி அரேபியாவுடன் ஒத்துழைக்க தயார் என இஸ்ரேல் தலைமை அதிகாரி  Gadi Eisenkot, நேர்காணலில் அறிவித்திருந்தார்.
இஸ்ரேல் அரபு நாடுகளுடன் பலமான ஒத்துழைப்பை கொண்டுள்ளது..  இஸ்ரேல் அரபு நாடுகளுடன் பலமான ஒத்துழைப்பை கொண்டுள்ளது.. Reviewed by Madawala News on 11/26/2017 12:21:00 PM Rating: 5