Kidny

Kidny

பௌத்த தீவிரவாதியை சந்திக்க மியன்மார் செல்லும் ஞானசார தேரர்


பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மியன்­மாரின் தீவி­ர­வாத
கொள்­கை­களைப் பின்­பற்றும் பௌத்த அமைப்பின் தலை­வ­ரான அசின் விராது தேரரை சந்­தித்து சம­கால பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக நாளை 7 ஆம் திகதி மியன்­மா­ருக்குப் பய­ண­மா­க­வுள்ளார். 

அசின் விராது தேர­ரு­ட­னான சந்­திப்பில் மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­களின் பிரச்­சினை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் முக்­கிய இடம்­பெ­ற­வுள்­ள­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

பௌத்த தேர­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் நாடு­க­ளான இலங்கை மற்றும் மியன்­மா­ருக்கு இடையில் நட்­பு­ற­வினை மேம்­ப­டுத்­துதல் மற்றும் தேவை­யான உத­வி­களைப் பரி­மா­றிக்­கொள்ளல் என்பன தொடர்பிலும்  கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 ARA.Fareel

பௌத்த தீவிரவாதியை சந்திக்க மியன்மார் செல்லும் ஞானசார தேரர் பௌத்த தீவிரவாதியை சந்திக்க மியன்மார் செல்லும் ஞானசார தேரர் Reviewed by Madawala News on 11/06/2017 04:32:00 PM Rating: 5