Kidny

Kidny

அபாயா அணிந்த ஆசிரியைகளுக்கு பாடம் நடத்த தடை #கண்டி ..


கண்டி மகளிர் உயர் பாடசாலை அபாயா அணிந்து சென்ற இரு ஆசிரியைகளுக்கு
பாடம் நடத்துவதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அரசாங்க தேசிய பாடசாலையான கண்டி மகளிர் உயர் பாடசாலைக்கு நியமனம் பெற்று சென்ற ஒரு முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடம் நடத்த அதிபர் மறுப்பு வெளியிட்டுள்ளார்.

அபாயா அணிந்து வந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படும் அதேனேரம்  குறித்த இருவரில் ஒரு ஆசிரியை அங்கிருந்து மாற்றலாகி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் குறித்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண சபையில் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அபாயா அணிந்து வருவதை எவருக்கும் தடை செய்யமுடியாது என சபையில் சுட்டிக்காட்டியுள்ள அவர் இஸ்லாமிய பெண்களை அணியும் ஆடையினால் மற்றவர்களுக்கு என்ன இடையூறு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் உடலை மூடி உடை அணிவதால் சமூக சீர் கேடுகள் குறைவடையும் என கூறியுள்ள அவர் அறை குறை ஆடை அணிந்து செல்ல ஆசிரியர் தொழில் ஒன்று எயார் ஹொஸ்டர் தொழில் இல்லை என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அபாயா அணிந்த ஆசிரியைகளுக்கு பாடம் நடத்த தடை #கண்டி ..  அபாயா அணிந்த ஆசிரியைகளுக்கு  பாடம் நடத்த தடை #கண்டி .. Reviewed by Madawala News on 11/24/2017 10:48:00 PM Rating: 5