Kidny

Kidny

பள்ளிவாசலில் பன்றி தலையை வீசியவர் பின்னால் செல்லமுடியாது : வடரக தேரர்


மஹியங்கனை பள்ளிவாசலில் பன்றி தலையை வீசிய சம்பவத்தின் பின்னனியில் இருந்த பொதுபல
சேனா அமைப்பின் மஹியங்கனை அமைப்பாளரும் சுதந்திர கட்சியின் அமைப்பாளராக ஜனாதிபதியால் அணமியில் நியமிக்கப்பட்ட  கேபி குணவர்தன தலைமையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியில் தான் எவ்வாறு போட்டியிட முடியும் என வடரக விஜித தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்

மஹியங்கனை பிரதேச சபையின் சுதந்திர கட்சி முன்னாள் உறுப்பினரான அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் ,

மஹியங்கனையில்  முஸ்லிம் விரோத செயற்பாடுகளை நடத்தியவரும் ஞானசாரரை அழைத்து வந்து இங்கு பொதுக்கூட்டம் நடத்தியவரும் பொதுபல சேனா மஹின்யங்கனை அமைப்பாளருமான கேபி குணவர்தனவுக்கு ஶ்ரீ லங்கா  சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவி ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை பள்ளிவாசலில் பன்றி தலையை வீசிய சம்பவத்தின் பின்னனியில் இருந்தவரும் முஸ்லிம்களை 24 மணி நேரத்தில் மஹியங்கனையில் இருந்து வெளியேற வேண்டும் என பல்வேறுபட்ட முஸ்லிம் விரோத போஸ்டர்களை ஒட்டிவரும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசிய என்னை தாக்கியவர்களும் கேபி குணவர்தனவும் அவரது குழுவினரும் தான்.

இப்படியான ஒருவரின் பின்னால் எனக்கு பணியாற்ற முடியாது என்பதை நான் ஏற்கனவே சுதந்திர கட்சி தலைவர் ஜனாதிபதியிடம் கூறிவிட்டேன்.அவரை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

தொடர்ந்து அவர் மஹியங்கனை அமைப்பாளர் பதவியில் நீடித்தால் நான் வேறு ஒரு கட்சியில் போட்டியிடுவதை பற்றி நான் சிந்திக்க வேண்டும்  என வடரக தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசலில் பன்றி தலையை வீசியவர் பின்னால் செல்லமுடியாது : வடரக தேரர்  பள்ளிவாசலில் பன்றி தலையை வீசியவர் பின்னால் செல்லமுடியாது : வடரக தேரர் Reviewed by Madawala News on 11/01/2017 08:02:00 PM Rating: 5