Kidny

Kidny

நேற்று ஸ்தலத்திற்கு சென்ற அமைச்சரின் வாகனத்திற்கும் கல் வீச்சு தாக்குதல் ..


கிந்தொட்டயில் ஏற்பட்ட இன முருகல் தற்போது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள
நிலையில் அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் வாகனத்தை இலக்கு வைத்து தூபாராம விகாரை பகுதியில் கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பிரிதி அமைச்சர் அஜித் பி பெரேராவின் வாகனம் சேதமடைந்துள்ளது.

தற்போது ராணுவம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆகிய படையணிகள் களத்தில் இறங்கி பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு பா உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அமைச்சர் பைஸர் முஸ்தபா ,அமைச்சர் ரிஷாத் மற்றும் பா உறுப்பினர்ஆகியோர் ஸ்தலத்திற்கு சென்றுள்ள அதேவேளை முன்னாள் மாநகரசபை உறுப்பினர் பௌசுல் நியாஸ் அவர்களுக்கு நிலமைகள விளக்கியுள்ளார்.

காலி, ஜிந்தோட்ட பகுதியிலே நேற்று மாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தையடுத்து அங்கே தற்போதைய சூழ்நிலையைப் பார்வையிடுவதற்காக அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அங்கு பாதிக்கப்பட்டிருந்த மக்களையும், வன்முறையாளர்களால் சேதமாக்கப்பட வாகனங்கள், கடைகள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளையும் பார்வையிட்டுள்ளார்.

ஜிந்தோட்டை விதானகொட, குருந்துவத்த, மகாசபுகல, எலபட, எம்பிட்டிய போன்ற பகுதிகளிலும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமையை காணக் கூடியதாக இருந்தது. பாதுகாப்பு காரணங்கள் நிமித்தம் அங்குள்ள மக்கள் வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

இந்த நாசகார செயல்கள் திட்டமிட்டு செய்யப்பட்டிருப்பதாகவும், அதற்கு அங்குள்ள மதகுரு ஒருவரும் மதஸ்தலம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த மதகுருவால் வெளிமாவட்டங்களிலுள்ள ஆட்கள் வரவழைக்கப்பட்டு இத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்தனர்

தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதுடன், இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


நேற்று ஸ்தலத்திற்கு சென்ற அமைச்சரின் வாகனத்திற்கும் கல் வீச்சு தாக்குதல் ..  நேற்று ஸ்தலத்திற்கு சென்ற அமைச்சரின் வாகனத்திற்கும் கல் வீச்சு தாக்குதல் .. Reviewed by Madawala News on 11/18/2017 09:02:00 AM Rating: 5