Kidny

Kidny

சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு பல நாடுகள் பாராட்டு

இலங்கையின் மனித உரிமை அறிக்கை ஐநா மனித உரிமைகள் பேரவையின் அகில மீள் பரிசீலனை
செயற்பாட்டுக் குழுவின் பரிசீலனைக்காக நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனீவா கூட்டத்தில் நேற்று தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கை தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க நடைமுறை சார்ந்த விபரங்களை சரியாக புரிந்துகொண்டு செயற்படுகின்றமை தொடர்பில் உலக நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக பிரதி அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துக் கொண்டு சவால்களை வெற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தம் இலங்கையின் சமகால அரசாங்கத்திற்கு உணடு.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஜெனீவா கூட்டத்தொடர் தொடர்பாக பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கையில் , சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்தை பாராட்டி கௌரவித்ததாக கூறினார்.
சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு பல நாடுகள் பாராட்டு  சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு பல நாடுகள் பாராட்டு Reviewed by Madawala News on 11/16/2017 11:10:00 AM Rating: 5