Kidny

Kidny

மிகவும் பொறுப்புடன் உண்மையாக செயற்பட்டேன்.


மோல்டா நாட்டிற்று உரிய அனுமதியைப்பெற்றே சென்றதாக மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி
மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தகமானியில் எந்தவித குறைபாடும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் 15ஆம் நாள் இன்றாகும். இன்றையதினம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கைகள் , சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் தொடர்பிலான அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு தொடர்பில் இன்றைய விவாதம் காலை ஆரம்பமானது.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் கேள்வியொன்று கேக்கப்பட்டது .

அவர் ஏன் வெளயிநாட்டுக்கு போனார்?


அமைச்சர் பைசர் முஸ்தபா: மோல்டா நாட்டின் உள்ளுராட்சி மன்ற மாநாடு நடைபெற்றது. இதற்கு இலங்கைக்கும் அழைப்பு கிடைத்தது.


ஜனாதிபதியின் அனுமதியுடன் மோல்டாவுக்கு சென்றேன். நாட்டை விட்டு ஓடவில்லை. நாட்டின் தலைவருடன் அனுமதி பெற்றேன். அமைச்சரவை ஆவணத்திலும் இதனை நான் குறிப்பிட்டேன். நான் சட்டத்தரணி , எனக்கெதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான் எனது பதவியை கேலிக்குட்படுத்தமாட்டேன்.

எனது ஜனாதிபதி சட்டத்தரணி பதவி பெறுமதிமிக்கதாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கே செயற்பட்டேன். நாட்டிற்கும் அரசியல் கட்சிக்கும் நீதியை நிறைவேற்றுவேன். தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தயாரிக்கப்பட்ட போது அது தொடர்பாக அனைத்து கட்சிக்கும் தெளிவுபடுத்தினேன். வர்த்தமானியில் குறைபாடுகள் இல்லை. பொறுப்புடன் நான் இதை கூறுகின்றேன். தற்பொழுது இடைக்கால உத்தரவே வழங்கப்பட்டுள்ளது.

மிகவும் பொறுப்புடன் உண்மையாக செயற்பட்டேன். பொதுமக்கள் நீதி மன்றததிற்கு செல்லத்தயார். குளறுபடியான வர்த்தமானி தயாரிக்கப்படவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மிகவும் பொறுப்புடன் உண்மையாக செயற்பட்டேன்.  மிகவும் பொறுப்புடன் உண்மையாக செயற்பட்டேன். Reviewed by Madawala News on 11/27/2017 01:09:00 PM Rating: 5