Ad Space Available here

18 வருடங்களாக வடக்கும் கிழக்கும் இணைந்தே செயற்பட்டனஅரசியல் தீர்வு விடயத்தில் நாம் முஸ்லிம்களையும் அரவணைத்து தமிழ்

பேசும் மக்கள் என்ற ரீதியில் ஓரணியிலேயே பயணிப்போம். புதிய அரசமைப்பில் தமிழ் பேசும் மக்கள் ஏற்காத எந்தத் தீர்வையும் நாம் அங்கீகரிக்கமாட்டோம்.” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றபோது முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகளையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டு தமிழ் பேசும் மக்களாக இரு தரப்பினரும் ஓரணியில் நின்று வாக்களிக்கவேண்டும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான மாமனிதர் அஷ்ரப் அன்று முன்வைத்த கோரிக்கைகளை நாம் மறந்திடலாகாதுஎன்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டார்.


மைத்திரி ரணில் ஆட்சியில் புதிய அரசமைப்புக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் நழுவவிடாமல் உரிய முறையில் பயன்படுத்தவேண்டும். அதற்காகவே நாம் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளுக்கு ஆதரவளித்து வருகின்றோம்.

இந்த நாட்டின் உயர்நீதிமன்றத்தில் எமது கட்சியின் கொள்கைகளைக் காரணங்காட்டி வழக்குத் தொடரப்பட்டிருந்தது


மாவை சேனாதிராஜா அப்போது செயலாளராக இருந்தமையால் அவருக்கு எதிராக வழக்கைத் தொடர்ந்தார்கள். அதில், “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கொள்கை நாட்டைப் பிரிப்பதாக உள்ளது. ஆகவே அதனைத் தடைசெய்யவேண்டும் என்று அறிவிக்கவேண்டும்எனக் கூறினார்கள்.


ஆனால், அந்த வழக்கில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், சுமந்திரன் ஆகியோர் சர்வதேச நாடுகளிலுள்ள சமஷ்டி வடிவங்களை உதாரணமாகக் கூறினார்கள். பல்வேறு வாதங்களை முன்வைத்தார்கள். அதன் பிராகரம் சமஷ்டி பிரிவினையல்ல என்று தீர்ப்பை அறிவித்தார்கள். இந்தத் தீர்ப்பை அறிவித்தவர்கள் சிங்கள நீதிபதிகள் என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ளவேண்டும். அதேநேரம் நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பாகவும் கவனத்தில்கொள்ளவேண்டும்.


தற்போது வெளிவந்துள்ள புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் வார்த்தைகளை மையமாக வைத்து விமர்சனம் செய்கின்றார்கள். ஒருமித்த நாடு என்பது நாடு ஒருமித்து, பிளவுபடாதிருப்பதையே குறிக்கின்றது. அது ஆட்சி முறைமையைக் குறிக்கவில்லை. அதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.


எமது விடயங்களை நாமே கையாளக்கூடிய வகையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதையே கோருகின்றோம். வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடும். அந்தவகையில் இடைக்கால அறிக்கையில் அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயங்கள் முன்னேற்றகரமாகக் காணப்படுகின்றன.


அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பது தனியே தமிழ்பேசும் மக்கள் சார்ந்தவொரு விடயம் அல்ல. இந்த அதிகாரப்பகிர்வு சிங்கள மக்களுக்கும் நன்மை பயக்கும். எனவே, மத்திய அரசிடமிருந்து அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

அதிகாரப்பகிர்வு என்ற விடயத்தை இன ரீதியாக எவரும் பார்க்கக்கூடாது. அது நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரியானதொன்றாகவே பார்க்க வேண்டும். இந்த மனநிலை அனைத்து மக்கள் தரப்பினரிடத்திலும் ஏற்பட வேண்டும்.


அடுத்ததாக, பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாகக் கூறுகின்றார்கள். பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று விமர்ச்சிக்கின்றார்கள். இடைக்கால அறிக்கையில் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ள அதேநேரம், ஏனைய மதங்களுக்கும் சமத்துவம் அளிக்கப்படவேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ஏனைய மதங்களுக்குமான உரிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.


வடக்கு கிழக்கு இணைப்பு விடயம். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்திருந்தன


18 வருடங்களாக இந்த மாகாணங்கள் இணைந்தே செயற்பட்டன. இருப்பினும், நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் இந்த இரண்டு மாகாணங்களும் தனித்தனியாக்கப்பட்டுள்ளன என்பதை வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாகக் கருத்து வெளியிடுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்என அவர் மேலும் தெரிவித்தார்.

18 வருடங்களாக வடக்கும் கிழக்கும் இணைந்தே செயற்பட்டன  18 வருடங்களாக வடக்கும் கிழக்கும் இணைந்தே செயற்பட்டன Reviewed by Madawala News on 11/13/2017 04:46:00 PM Rating: 5