Kidny

Kidny

சமகால அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.சபையின் ஆணைக்குழுவிற்கு விளக்கம்


இலங்கை முன்னெடுக்கும் சமாதான செயற்பாடுகள் தொடர்பான விடயங்களை ஐ.நா.சபையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான ஆணைக்குழுவிடம் பகிந்துகொண்டுள்ளது.

நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி , இலங்கைக்கான நல்லிணக்க பொறிமுறையின் செயலாளர் நாயகம் அலுவலகத்தின் இணைப்பாளர் மனோ தித்தவல ஆகியோர் இது தொடர்பான தகவல்களை ஐநா சபையின் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான ஆணைக்குழுவுடன் பகிந்துகொண்டுள்ளது.


நிலையான சமாதானத்திற்காக சமகால அரசாங்கம் முன்னெடுத்துவரும் இணக்கப்பாடு தொடர்பான மறுசீரமைப்பு தேசிய ஐக்கியத்திற்காக தவிர்க்கப்படவேண்டிய வன்முறை தொடர்பிலான விடயங்கள் குறித்து ஆணைக்குழுவிடம் தெளிவுபடுத்தியதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் தெரிவித்துள்ளது.


இக்கூட்டத்தில் ஐ.நா.சபையின் சிரேஷ்ட அதிகரிகள், சமாதானத்திற்கான ஐநா.சபையின் ஆணைக்குழுவின் தலைவரும் , கொரியாவிற்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

சமகால அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.சபையின் ஆணைக்குழுவிற்கு விளக்கம்  சமகால அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.சபையின் ஆணைக்குழுவிற்கு விளக்கம் Reviewed by Madawala News on 11/22/2017 06:40:00 PM Rating: 5