Kidny

Kidny

யார் இந்த அஷ்ரஃப் சிஹாப்தீன்?



இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தி தேவைப்படும் பட்சத்தில் அவர்களைக்
கண்டித்து வழிகாட்டும் மிகச் சிறந்த பண்பு கொண்ட ஒருவர்தான் சிரேஷ்ட எழுத்தாளர், ஒலி,ஒளிபரப்பாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள். 

“தான் எழுதினால் போதும்…. தன்னை எவரும் மிஞ்சி விடக் கூடாது என நினைக்கும் மிகக் கேவலமான சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் மத்தியில் இப்படியான மனிதர்கள் வாழ்வது கண்டு நான் மகிழ்கிறேன்.

பல நூல் வெளியீட்டு விழாக்களுக்கு நான் அண்மைக் காலமாகச் சென்றிருந்த போது, யாரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு நான் சென்றுள்ளேன் என்று சந்தேகித்து சிந்திப்பேன். நேற்று முன்தினம் சகோதரி பாத்திமா ஸிமாரா அலியின் நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்த போது கூட சகோதரரர் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவுக்காக நாம் சென்றுள்ளோம் என எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை எனது மனைவியிடம் தெரிவித்தேன். 

என்னைப் போல் ஒரு பார்வையாளராக அவர் நாற்காலியில் அமர்ந்திராது “தான் “காலி” ஆகக் இருக்கக் கூடாது” என்ற நிலையில் அனைத்து விடயங்களையும் அவர் முன்னெடுத்துச் சென்றதனைக் கண்டு ஒரு வகையில் நானே அவர் மீது பொறாமை கொள்ள வேண்டி நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது.

அவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்து விட்டால்..“ அல்ஹம்துலில்லாஹ்” என்று நிம்மதி பெருமூச்சை விடலாம். ஆனால், நாம் பொறுமையாளனாக நாம் இருக்க வேண்டும். அதன் பெறுமானத்தை நாம் முற்றாக அடைய வேண்டுமென்றால்…

அஷ்ரஃப் சிஹாப்தீன் என்ற பெயர் தமிழ் கூறும் உலகெல்லாம் பரவி உள்ள நிலையில், அவரை எவரும் வித்தகச் செருக்குமிக்கவர் என  நினைத்தால் அல்லது விமரச்சித்ததால் அது அவர்களின் புரிந்து கொள்ளாமை அல்லது காழ்ப்புணர்வே என்றே கூற முடியும்.

 இவரிடம் உள்ள இன்னொரு விடயம் “சபை கவர்தல் பண்பு“.  சபையை அறிந்து பேசுவது, தனக்கு வழங்கப்பட்ட விடயத்தை விட்டு வெளியே செல்லாமல் அதற்குள்ளே நின்று கொள்ளல். இந்தப் பண்புகள்  அவரிடத்தில் தனியிடம். 

பார்வையாளர்களைச் சலிப்படையச் செய்ய விடமாட்டார். முகம் சுழிக்கச் செய்யார்.  இவன் எப்போது பேச்சை முடிப்பான் என்ற வெறுப்பனையும் முணுமுணுப்பையும்  சபையிலிருந்து தோற்றுவிக்கமாட்டார்.  

எனது குடும்ப நண்பரான மேமன் கவி அவர்கள் அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தொடர்பில் நான் மேலே கூறிய அனைத்து   விடயங்களையும் கற்றுக் கொள்வது சிறந்தது மட்டுமல்ல கட்டாயமானது.

- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.
யார் இந்த அஷ்ரஃப் சிஹாப்தீன்?  யார் இந்த அஷ்ரஃப் சிஹாப்தீன்? Reviewed by Madawala News on 11/20/2017 10:04:00 PM Rating: 5