Kidny

Kidny

பெட்றோலுடன் லேடி நெவஸ்கா இன்று இலங்கையை வந்தடையும்..

பெற்றோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இவ் வாரம் இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் 
 விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில்,

லேடி நெவெஸ்கா என்ற ஒரு கப்பல்
இன்று புதன் நள்ளிரவுக்கு முன்னர் இலங்கையை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை இலங்கைக்கு எடுத்துவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பெற்றோல் நெருக்கடிக்கு அவசர தீர்வாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஒரு நாளைக்கு சுமார் 2500 மெற்ரீக் டொன் எர்பொருள் பாவனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதே நேரம் இந்தியாவில் இருந்து நாளை மறுதினம் (09) ஒரு கப்பலும் நாட்டுக்கு வரவுள்ளதாக தெரிக்கப்படுகிறது.
பெட்றோலுடன் லேடி நெவஸ்கா இன்று இலங்கையை வந்தடையும்..  பெட்றோலுடன்  லேடி நெவஸ்கா இன்று இலங்கையை வந்தடையும்.. Reviewed by Madawala News on 11/08/2017 08:44:00 AM Rating: 5