Kidny

Kidny

பத்திரிகைகளில் தற்போது வரும் தலைப்பு செய்திகள் சிலருக்கு பிடிக்கவில்லை அதனாலே இனவாத பிரச்சினை ..


முறி மோசடி தொடர்பான பிரச்சினையை மழுங்கடிக்க தற்போது இனவாத பிரச்சினையை முன்கொண்டுவந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.


இன்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட அவர் 


சிறு சம்பவம் ஒன்று தற்போது பூதாகரமான இனவாத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.இந்த விடயம் ஒரு திட்டமிட்ட செயலா என்ற சந்தேகம் எழுகிறது.மேலும் தற்போது பத்திரிகை முதல் பக்கங்களில் வரும் செய்திகளை மாற்றி வேறு செய்திகளை பிரசுரிக்க வைக்கும் உக்தியா என்ற சந்தேகம் எழுகிறது.


தற்போது முறி மோசடிக்கு  கோப் குழுவில் ஒப்பமிட்டவர்கள் தொடர்பான விடயங்களே தலைப்பு செய்தியாக வருகிறது. அவற்றை மாற்ற இனவாத தலைப்பு செய்திகள் தேவைப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.


எதோ ஒரு பாரிய சக்தி இல்லாமல் ஒருவரின் சொத்துக்களை இன்னொருவர் சூரையாட முடியாது . அந்த சக்தி எது என்பதை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


பத்திரிகைகளில் தற்போது வரும் தலைப்பு செய்திகள் சிலருக்கு பிடிக்கவில்லை அதனாலே இனவாத பிரச்சினை ..  பத்திரிகைகளில் தற்போது வரும் தலைப்பு செய்திகள் சிலருக்கு பிடிக்கவில்லை அதனாலே இனவாத பிரச்சினை .. Reviewed by Madawala News on 11/18/2017 09:58:00 PM Rating: 5