Kidny

Kidny

எமக்கு சமஷ்டியை வழங்காவிடின் தனிநாடு கோர வேண்டிய அவசியம் ஏற்படும்."



“எமக்கு சமஷ்டியை வழங்காவிடின் தனிநாடு கோர வேண்டிய அவசியம் ஏற்படும்." என அவுஸ்திரேலியத் தூதுவரிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

"அவுஸ்திரேலியா போன்று சமஷ்டி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோருகின்றனர். அதனை வழங்கினால் தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்ற ஐயப்பாடு தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் உண்டு. சமஷ்டித் தீர்வை வழங்காவிடின்தான் தனிநாட்டைக் கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும்" என தான் அவுஸ்திரேலிய தூதுவரிடடம் எடுத்துரைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சமஷ்டி அதிகாரங்களையோ அல்லது நாடு பிளவடையக்கூடிய அதிகாரங்களையோ வழங்க நான் தயாராக இல்லை" என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தென்கொரியாவில் வைத்து தெரிவித்திருந்த நிலையிலேயே, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆஸ்திரேலியத் தூதுவரிடம் இந்த விடயத்தைக் இடித்துரைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு சென்ற அவுஸ்திரேலியத் தூதுவர் பைரஸ் ஹட்ச்சன் வடக்கு மாகாண முதலமைச்சரை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் சி.வி.விக்னேaஸ்வரன் கருத்து வெளியிடுகையில் “அவுஸ்திரேலியாவில் சமஷ்டி முறையில் அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு மாகாணங்களும் தங்களைத் தாங்கள் ஆளுகின்ற வசதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத்தான் தமிழ் மக்கள் இங்கு கோருகின்றனர். அதற்கு ஒவ்வொரு தென்னிலங்கை அரசும் முட்டுக்கட்டையாக இருந்து வந்துள்ளன.

சமஷ்டியை வழங்க மறுப்பதற்கு அவர்களின் அச்சநிலையும் காரணமாக அமைகின்றது. சமஷ்டி அதிகாரப் பகிர்வைப் பெற்றுக்கொண்டு தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு உண்டு.

ஆனால், சமஷ்டி அதிகாரப் பகிர்வை வழங்காதுவிடின்தான் தமிழ் மக்கள் தனிநாட்டுக் கோரிக்கைக்குச் செல்வர். தமிழ் மக்களின் சுயாட்சிக்கு இடையூறு விளைவிக்காதுவிடின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான அவசியம் அவர்களுக்கு ஏற்படாது என்று ஆஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துரைத்தேன்" என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமக்கு சமஷ்டியை வழங்காவிடின் தனிநாடு கோர வேண்டிய அவசியம் ஏற்படும்."  எமக்கு சமஷ்டியை வழங்காவிடின் தனிநாடு கோர வேண்டிய அவசியம் ஏற்படும்." Reviewed by Madawala News on 11/30/2017 09:19:00 PM Rating: 5