Kidny

Kidny

நாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதவைகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது ..


பொதுபல சேனாவுடனான முஸ்லிம் தரப்பின் பேச்சுவார்த்தைகளில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி ஊடகங்களில் கூறியுள்ள நிலையில் முஸ்லிம்களுடனான பேச்சுவார்த்தை தொடர்பான அஸாத் சாலி கூறும் கருத்துக்களை அவரே பொறுப்பேற்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே குறிப்பிட்டார்.

பொதுபல சேனாவுடன் முஸ்லிம் தரப்பு தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பில் முஸ்லிம் தரப்பு சார்ப்பாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இது தொடர்பில் பொதுபல சேனா உத்தியோகபூர்வமாக இதுவரை எதுவித  கருத்தும் வெளியிடவில்லை.

இது தொடர்பில் தொடர்பில் நாம் பொதுபல சேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகேவை தொடர்ப்பு கொண்டு கேட்டபோது..

பொதுபல சேனா அமைப்பு  கடந்த காலங்களில் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் மாத்திரமின்றி பல்வேறு தரப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருவதாக கூறிய அவர் இதுவும் அவ்வாரான ஒரு பேச்சுவார்த்தை என குறிப்பிட்டார்.

ஞானசார தேரர்  அல்லாஹ்,அல்குர்ஆன்,நபிகள் நாயகம்,ஹதீஸ் உள்ளிட்டவைகளை பற்றி விமர்சிக்க மாட்டார் என வாக்குறுதி அளித்துள்ளதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஆஸாத் சாலி ஊடகம் ஒன்றிற்கு கூறியுள்ளாரே இது உண்மையா என நாம் வினவிய போது 

ஆஸாத் சாலி கூறிய கருத்துக்கள் தொடர்பில் நீங்கள்  அவரிடமே கேட்க வேண்டும்,அசாத் சாலி பொதுபல சேனா ஊடக செயலாளர் அல்ல அவர் கூறும் கருத்துக்களுக்கு நாம் பொறுப்பு கூற முடியாது இவ்வாறான கருத்துக்களை அவர் கூறுவது தொடர்பில் நான் புதுமையடைகிறேன். அவர் கூறும் விடயங்களுக்கு நாம் பொறுப்பாக முடியாது என டிலந்த விதானகே குறிப்பிட்டார்.

பொதுபல சேனா வில்பத்து தொடர்பில் நீங்கள் தெளிவு பெற்றுவிட்டதாகவும் அங்கு முஸ்லிம்களுக்கு 100 வீடுகளை கட்டித்தவதாக உங்கள் அமைப்பு கூறியதாக உங்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் முஸ்லிம் தரப்பு கூறியிள்ளது இது உண்மையா என நாம் வினவிய போது ..

அவ்வாறு ஏதும் இருப்பின் நாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என குறிப்பிட்டார்.
நாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதவைகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது .. நாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்காதவைகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது .. Reviewed by Madawala News on 11/04/2017 07:06:00 PM Rating: 5