Kidny

Kidny

கலவரங்களை காட்டி முஸ்லிம்களை முட்டாள்களாக்கிய கயவர்கள் எங்கே?

இலங்கையின் வரலாற்றில் பல இனக் கலவரங்களை முஸ்லிம்கள் சந்தித்திருக்கின்றார்கள், அதிலே
அதிகமாக பாதிக்கப்பட்டது முஸ்லிம் சமூகம்தான் என்றால் அது மிகையாகாது.

சிங்கள முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட்டால், அரசாங்கம் தொடங்கி பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு படைவரை அதில் அங்கம் வகிப்பது பெரும்பான்மையைச் சேர்ந்த சிங்களவர்களாகவே இருப்பதனால், அவர்களின் மூலம் உடனடியாக முஸ்லிம்கள் நியாயத்தை எதிர்பார்ப்பது என்பது முயற்கொம்பான விடயமாகவே இருந்துவருகின்றது.

எது எப்படியிருந்தாலும் ஏதாவது இனக் கலவரங்கள் ஏற்பட்டால் முஸ்லிம்கள் என்றவகையில், முஸ்லிம் தலைவர்கள் தொடக்கம் சாதாரண முஸ்லிம் பொதுமகன் வரை இதயசுத்தியுடன் அதற்கு கவலைப்படுபவனாகவே இருப்பார்கள், ஆனால் மஹிந்த காலத்தில் நடந்த அளுத்கமை பிரச்சினையை மட்டும் நமது முஸ்லிம்களில் சில அரசியல்வாதிகள் தங்களது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தினார்கள் என்பதே வேதனைக்குறிய விடயமாகும்.

.தே.கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்த, அந்த கட்சியின் முக்கிய முஸ்லிம் புள்ளிகளான முஜிவுர் ரகுமான் போன்றோரும், மஹிந்தவுடன் தனிப்பட்ட கோபத்தைக் கொண்டிருந்த அசாத்சாலி போன்றவர்களும் அந்த கலவரத்தை ஊதிப்பெருப்பித்தது மட்டுமல்ல,இதற்கெல்லாம் அன்றய ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவும் அவரது தம்பியான கோதபாயவும்தான் காரணம் என்று குற்றம் சாட்டியது மட்டுமல்ல அதனை வைத்தே முஸ்லிம்களின் மத்தியில் கடும் எதிர்ப்புப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டிருந்தனர்.

தாங்கள் முஸ்லிம் சமூகத்துக்காகவே போராடுகின்றோம் என்றும், இதில் எங்களுக்கு எந்தவித அரசியல் உள்நோக்கமும் கிடையாதென்றும் கூறித்தான் மேற்சொன்னவர்கள் அன்று பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். அன்று இதனை நாங்களுட்பட முஸ்லிம்கள் அனைவரும் நம்பியது மட்டுமல்ல, அவர்களை முஸ்லிம்களின் கதாநாயகர்களாகவே பார்க்கத் தொடங்கினார்கள்.

அதேநேரம் அன்று மஹிந்த அரசிக்கு எதிரான இவர்களின் பிரச்சாரத்துக்கு தமிழ் மீடியாக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் பூரண அனுசரணைகளையும் வழங்கியிருந்தார்கள்.தமிழ் மீடியாக்களுக்கும், டயஸ்போராக்களுக்கும், அதேநேரம் தமிழ் மக்கள் உட்பட அதன் தலைவர்களுக்கும் மஹிந்த அரசை எவ்வகையிலாவது வீழ்த்தியேயாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்களுக்கு,இவர்களின் செயல்பாடுகள் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகவே அமைந்து விட்டது,அதனை அவர்கள் நன்றாகவே பயன்படுத்தியும் கொண்டார்கள்.

அன்று இதனையெல்லாம் இவர்களின் நாடகங்கள் என்று புரிந்துகொள்ளாத முஸ்லிம்கள், மஹிந்தவுக்கு எதிராக வாக்களித்தது மட்டுமல்ல, நல்லாட்சி என்றபெயரில் மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தையும் கொண்டுவர வாக்களித்திருந்தார்கள்

இந்த நல்லரசாங்கத்தின் ஊடாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளுக்கு எதிர்காலத்தில் முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்றும் நம்பியிருந்தவர்களுக்கு, அவர்களின் நம்பிக்கையில் இடிவிழுந்தது போன்ற செயல்பாடுகள்தான் இந்த நல்லரசாங்கத்திலும் நடந்துவருவதை கண்டு வருகின்றோம்.

அன்று மஹிந்த ஆட்சியில் நடந்த இனவாதசெயல்பாடுகளுக்கு எதிராக போராடுகின்றோம் என்று கூறியவர்கள், இந்ததாட்சியில் நடக்கும் அநியாயங்களை பொதுமேடைகளில் கண்டிப்பதாக நாடகமாடிக்கொண்டு,பின்கதவால் அந்த அரச தலைவர்களுடன் மிகவும் அன்னியோன்யமாகவும் இருந்தும் வருகின்றார்கள்.இவர்களின் செயல்பாடுகளை இப்போது ஒப்பிட்டுபார்க்கும் போதுதான் விளங்குகின்றது இவர்கள் மிகமோசமான நயவஞ்சகர்கள் என்பது.

தங்களுடைய அரசியல் நோக்கத்துக்காக முஸ்லிம் சமூகத்தின் உணர்ச்சிகளை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த இவர்கள், அதனை தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பது இப்போது முஸ்லிங்களுக்கு மிகத் தெளிவாக தெறிந்து வருகின்றது என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. (அதனை இணையதளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது).

முஸ்லிம் சமூகத்துக்காக உண்மையிலேயே இவர்கள் குரல் கொடுப்பவர்களாக இருந்திருந்தால் இன்று இந்த நல்லரசாங்கத்தில் நடக்கும் அவ்வளவு இனவாத செயல்பாடுகளுக்கும் கடும் கண்டனம் தெறிவிப்பது மட்டுமல்ல,மஹிந்த அரசாங்கத்தை எதிர்ப்பதில் காட்டிய ஆர்வத்தைவிட பல மடங்கு ஆர்வத்தை இப்போது காட்டியிருக்கவேண்டும், ஆனால் அதற்கு மாற்றமாக அவர்கள் இந்த நல்லாட்சியின் தலைவர்களுடன்  பின்கதவால் உறவாக இருப்பது மட்டுமல்ல, அவ்வப்பபோது அவர்களுடன் சேர்ந்து கொண்டு சந்தோசமான வெளிநாட்டு பிரயாணங்களும் செய்து வருகின்றார்கள்.

இவர்களுடைய செயல்பாடுகளும், நாடகமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றது, இதற்காக இவர்களுக்கு தகுந்த தண்டனையை இறைவன் வழங்காமலும் விடப்போவதில்லை, தங்களுடைய சுயலாபத்துக்காக முஸ்லிம் சமூகத்தை அன்னியவனிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்த இவர்கள் எப்படி முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலர்கள் என்று கூறமுடியும்?  

தம்புள்ள பள்ளிவாசல் தொடக்கம் காலி ஜிந்தோட்டை கலவரம்வரை இவர்களின் சதி நாடகங்களே பின்னால் இருந்துள்ளது என்பதை தெளிவாக்கி வருகின்றான் இறைவன், இதன் மூலம் இவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகம் இனம்கண்டு ஒதுக்கும் நாள் வெகுதூரமில்லை.

எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை.
கலவரங்களை காட்டி முஸ்லிம்களை முட்டாள்களாக்கிய கயவர்கள் எங்கே?  கலவரங்களை காட்டி முஸ்லிம்களை முட்டாள்களாக்கிய  கயவர்கள் எங்கே? Reviewed by Madawala News on 11/22/2017 01:16:00 AM Rating: 5