Kidny

Kidny

அரசை விட்டு வெளியேறவும் ; சு க வுக்கு மஹிந்த அணி கண்டிஷன் ..

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதென்றால்
ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அணியினர் வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடித்து தங்களது நேர்மைத்தன்மையை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நிபந்தனை முன்வைத்துள்ளதால் இணைப்பு முயற்சி மீண்டும் தோல்வியடையும் நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள குழு அறையில் நேற்று கூடிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
.தே..வுடனான கூட்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பான பேச்சுக்கள் தொடரும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினருக்கு அறிவிக்குமாறும் தங்கள் சார்பான பேச்சுக்குழுவுக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அறிவுறுத்தியுள்ளனர்

இந்த கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் காமினி லொக்குகே எம்.பி., அவர்கள் (சுதந்திரக் கட்சியினர்) .தே..வுடனான கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகி வரும் வரை பேச்சுக்கள் கிடையாது என்பதே எமது தீர்மானம். அப்படியில்லாவிட்டால் வரவுசெலவுத்திட்டத்தை அவர்கள் தோற்கடிக்க வேண்டும். .தே..வில் இருந்து விலகி வந்ததன் பின்னர் தான் நாம் பேசுவோம் என்று (பேச்சுவார்த்தை) குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அது தான் இறுதி தீர்மானம் என்று தெரிவித்தார்

இதேநேரம், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி வேட்பாளர்களை தயார்படுத்தி வருவதுடன், கட்டுப்பணங்களையும் செலுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், நாம் தனித்து கேட்க தயாராக இருக்கிறோம். பொதுஜன பெரமுன என்ற வகையில் நாம் தற்போது கட்டுப்பணத்தை செலுத்தியும் இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.  

சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியும் இணைய வாய்ப்பு கிடையாதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்;
முடியாது தானே. .தே..வில் இருந்து விலகினால் நாம் பேசுவோம். பேச்சுக்களை தொடர்வதென்றால் அதை செய்யுமாறு நாம் கூறியுள்ளோம். அந்த வார்த்தையில் அவர்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று காமினி லொக்குகே தெரிவித்தார்

அத்துடன், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது பற்றியே நேற்றைய கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் தாமரை மொட்டு சின்னத்திலேயே ஒன்றிணைந்த எதிர்க்கட்சி போட்டியிடவுள்ளதாகவும் குமார வெல்கம எம்.பி.யும் மேற்படி கூட்டத்தின் நிறைவில் தெரிவித்தார்

இதேநேரம், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் இந்த கூட்டத்தின் பின்னர் அதன் முடிவுகளை சுதந்திரக் கட்சியினருக்கு அறியத்தரும் வகையில் நேற்று இரவே இரு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நடைபெறவிருந்தது
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரு தரப்பும் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இணக்க பேச்சுக்களில் ஈடுபடும் நிமித்தம் நியமிக்கப்பட்டுள்ள குழுக்களே இந்த சந்திப்பை நடத்தவிருந்தன

சுதந்திரக் கட்சியின் சார்பான குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் பிரதி அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் சார்பான குழுவில் சீ.பீ. ரட்னாயக்க எம்.பி., மகிந்த யாப்பா அபேவர்தன எம்.பி., பவித்ரா வன்னியாராச்சி எம்.பி. ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

அரசை விட்டு வெளியேறவும் ; சு க வுக்கு மஹிந்த அணி கண்டிஷன் ..  அரசை விட்டு வெளியேறவும் ; சு க வுக்கு மஹிந்த அணி கண்டிஷன் .. Reviewed by Madawala News on 11/29/2017 10:44:00 AM Rating: 5