Kidny

Kidny

முஸ்லிம்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட சதி முயற்சியே முறியடிக்கப்பட்டுள்ளது.


கிந்தொட்டை பிரதேசத்தில் துரிதமாக செயற்பட்டு பாரியதொரு இனக் கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி, பிரதமர்,சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்தநாயக மற்றும் பொலிஸ் பாதுகாப்பு படையினருக்கு நன்றியைத் தெரிவிப்பதுடன் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நஷ்டயீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். . ஹலீம் தெரிவித்தார்.


கிந்தொட்டை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பாக பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவுக்கும் மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் தொடர்பு கொண்டு உடன் பாதுகாப்பு வழங்குமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்து துரிதமாக செயற்பட்டதால் பாரியதொரு இனக்கலவரத்தை உருவாக்க எடுத்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது .


தேர்தலை கருத்திற் கொண்டு முஸ்லிம்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட சதி முயற்சியே முறியடிக்கப்பட்டுள்ளது


இந்தக் கலவரம் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் பின்புலங்களை ஆராய்ந்து இனங்காணப்பட்டவர்களை அடையாளப்படுத்தி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் இரு சமூகங்களுக்கிடையே நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்தி சகஜமான உறவை மீளவும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் அமைசர் தெரிவித்தார்.


அதேவேளையில் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்ட ஒழுங்குக்கான அமைச்சர் சகாலரத்நாயக விடுத்துள்ள அறிக்கை வரவேற்கத் தக்கதாகும்


இது தொடர்ந்து நாட்டில் சட்டமாக இருத்தல் வேண்டும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி

முஸ்லிம்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட சதி முயற்சியே முறியடிக்கப்பட்டுள்ளது.  முஸ்லிம்களுடைய வாக்குகளை கொள்ளையடிப்பதற்காக தீட்டப்பட்ட சதி முயற்சியே முறியடிக்கப்பட்டுள்ளது. Reviewed by Madawala News on 11/18/2017 08:45:00 PM Rating: 5