Kidny

Kidny

கிந்தொட்டை கள நிலவரம் தொடர்பில் அங்கிருந்து பா உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்


கிந்தோட்டையில் இன்று  ஏற்பட்ட இன முறுகல் தற்போது பூரண கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

தற்போது ராணுவம் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படை ஆகிய படையணிகள் களத்தில் இறங்கி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாக கூறிய அவர் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் பலவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சேத விபரங்கள் தொடர்பில் நாளைய தினமே அறிந்துகொள்ள முடியும் என கூறிய அவர்,தற்போது நிலமை பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் எதுவும் இதுவரை ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பா உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தவிர அமைச்சர் பைஸர் முஸ்தபாவும் ஸ்தலத்திற்கு விஜயம் செய்துள்ள அதேவேளை அமைச்சர் ரிஷாத் மற்றும் பா உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் ஆகியோர் அங்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிந்தொட்டை கள நிலவரம் தொடர்பில் அங்கிருந்து பா உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  கிந்தொட்டை கள நிலவரம் தொடர்பில் அங்கிருந்து பா உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Reviewed by Madawala News on 11/18/2017 01:21:00 AM Rating: 5