Kidny

Kidny

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம்; பொன்சேகா எச்சரிக்கை


.ஜெயகாந்தன்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவதன் ஊடாக ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றும் நிலைமை உருவாகலாமென 

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


குருநாகல் பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்


அவர் இதன்போது மேலும் கூறுகையில்;


மீண்டும் ராஜபக்ஷ ஆட்சி உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது. ஆனால்  ஒருபோதும் தோற்கமாட்டோம். இந்தத் தேர்தலில் நாம் வெல்வோம். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவு பட்டிருப்பதால் அது நடக்கின்றது என  மகிழ்ச்சியடையக் கூடாது


நாம் தனித்து ஆட்சியமைக்க கூடிய வியூகங்களை வகுக்க வேண்டும். சிலவேளை தாமரை மொட்டு சின்னமானது மைத்திரிபால சிறிசேனவின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைவிட முன்னிலைக்கு வந்தாலோ , அந்தக் கட்சி பிரதான எதிர்க்கட்சியாக உருவாகினாலோ நாட்டிலுள்ள ஜனநாயகத்திற்கு அமைவாக எப்போதாவது ஒருநாள் அந்தக் கட்சி ஆட்சிக்கு வரலாம்


எதிர்க்கட்சி கீழ் நிலையில் விழுந்து கிடந்தாலும் 10 , 15 அல்லது 20 வருடங்களில் ஆட்சிக்கு வரலாம். இதனால் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபட்டிருப்பதாக எண்ணி எமக்குள் மகிழ்ச்சியடைய முடியாது எனவும்  தெரிவித்தார்

ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம்; பொன்சேகா எச்சரிக்கை  ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம்; பொன்சேகா எச்சரிக்கை Reviewed by Madawala News on 11/28/2017 04:17:00 PM Rating: 5