Kidny

Kidny

தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு கொரியா பாராட்டு …


தேசிய நல்லிணக்கம், மீள்கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் முன்னேற்றப் பணிகளுக்கு கொரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 
கொரியா – இலங்கை பாராளுமன்ற நட்புறவுக்குழு பிரதிநிகள் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை நேற்று மாலை சியோலில் ஜனாதிபதி தங்கியுள்ள கிரேண்ட் ஹயாட் ஹோட்டலில் சந்தித்தனர். சர்வதேச மன்றங்களில் குறிப்பாக கொரிய நெருக்கடியின்போது இலங்கை கொரியாவுக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்புக்கு அவர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.
இலங்கை நல்லிணக்கத்தையும் சுபீட்சத்தையும் அடைந்துகொள்ளும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற குழுவினர், இந்த முயற்சியில் சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு தொடர்ந்திருக்கும் என்றும் தெரிவித்தனர்.
கொரிய மக்கள் மத்தியில் இலங்கை தொடர்பாக ஆர்வமூட்டும் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் இப்பாராளுமன்றக்குழுவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
இரு நாடுகளின் மக்களுக்கிடையிலான பரஸ்பர தொடர்புகள் இருதரப்பு நட்புறவைப் பலப்படுத்தும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இத்தூதுக்குழுவில் ஆளும் ஜனநாயகக்கட்சியின் Park Young-sun, மக்கள் கட்சியின் Choi Myung-ghil மற்றும் நீதிக்கான கட்சியின் RohHoechan, Bueuranகட்சியின் Chung Won-cheun ஆகியோர் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
அமைச்சர் தயா கமகே, மற்றும் தூதுவர் மனிசா குணசேக்கர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு கொரியா பாராட்டு … தேசிய நல்லிணக்கம், மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு கொரியா பாராட்டு … Reviewed by Madawala News on 11/30/2017 03:52:00 PM Rating: 5